பாகிஸ்தான் ராணுவத் தலைவர் விவகாரம் வெறும் கட்டியணைப்பு தான், ரஃபேல் ஒப்பந்தம் கிடையாது  - நவ்ஜோத் சித்து

பாகிஸ்தான் ராணுவ தலைவரை கட்டி அணைத்ததற்கு கண்டனம் தெரிவித்து வந்த பாஜகவினருக்கு நவ்ஜோத் சிங் சித்து இன்று (புதன்கிழமை) பதிலளித்துள்ளார்.  
பாகிஸ்தான் ராணுவத் தலைவர் விவகாரம் வெறும் கட்டியணைப்பு தான், ரஃபேல் ஒப்பந்தம் கிடையாது  - நவ்ஜோத் சித்து

பாகிஸ்தான் ராணுவ தலைவரை கட்டி அணைத்ததற்கு கண்டனம் தெரிவித்து வந்த பாஜகவினருக்கு நவ்ஜோத் சிங் சித்து இன்று (புதன்கிழமை) பதிலளித்துள்ளார்.  

பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு சென்ற பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ நவ்ஜோத் சிங் சித்து அந்நாட்டு ராணுவத் தலைவர் கமர் ஜாவத் பஜ்வாவை கட்டித் தழுவினார். சித்துவின் இந்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதுகுறித்து சித்து அப்போது விளக்கம் அளிக்கையில், சீக்கியர்கள் குருத்வாரா யாத்திரை செல்வதற்காக கர்தர்பூர் சாகிப் வழித்தடத்தை பயன்படுத்த பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்ததை அடுத்தே தான் பாகிஸ்தான் ராணுவ தலைவரை கட்டி அணைத்தேன்' என்று கூறியிருந்தார்.

இருப்பினும், இந்த சம்பவத்துக்காக சித்துவை பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் அப்போது கண்டித்தார்.

இந்நிலையில், ராணுவ தலைவரை சித்து கட்டி அணைத்தது இந்தியா ராணுவ வீரர்களுக்கு சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, அதனை சித்து தவிர்த்திருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்கிழமை தெரிவித்தார். மேலும், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்சிம்ராத் கௌர் இந்த விவகாரத்தில் சித்து பொய் சொல்வதாக குற்றம்சாட்டினர். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் சித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், 

"இந்த விவகாரத்தை நீங்கள் கிளப்பிவிட்டே இருங்கள். அது வெறும் கட்டி அணைப்பு தான். சதித்திட்டமோ, ரஃபேல் ஒப்பந்தமோ, சீக்கியர்கள் மீது சுடுவதோ அல்ல. நீங்கள் சீக்கியர்களின் உணர்வை பற்றி பேசுவது இல்லை. உணர்வுப்பூர்வமான அந்த ஒரு நொடி அணைப்பை நீங்கள் ஊதி பெரிதுபடுத்துகிறீர்கள். இது சதித் திட்டமா?

இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது கைகுலுக்க மாட்டீர்களா? பாகிஸ்தான் பிரதமர் இங்கு பல போட்டிகளில் விளையாடியுள்ளார், நல்ல மனிதர். அவர், இந்திய வீரர்களிடம் கைகுலுக்குகிறார் அல்லது கோலி போன்ற வீரரை கட்டி அணைக்கிறார். அந்த சமயத்தில், அவர் முகத்தை திருப்பிக் கொண்டு போவாரா? 

கர்தர்பூர் சாகிப் வழித்தட விவகாரத்தில் உதவியாக இருங்கள். எதற்காக தடையை உருவாக்குகிறீர்கள்?" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com