உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு: ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் உத்தரவு

ம்மு-காஷ்மீரில் நடைபெறவுள்ள நகராட்சி தேர்தல் மற்றும் ஊராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அந்த


ம்மு-காஷ்மீரில் நடைபெறவுள்ள நகராட்சி தேர்தல் மற்றும் ஊராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அந்த மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக அரசு செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
காவல் துறை மாவட்ட கண்காணிப்பாளர்கள், காவல் துறை துணை ஆணையர்கள் ஆகியோருடன் ஆளுநர் சத்யபால் மாலிக் ஸ்ரீநகரில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இந்தத் தேர்தலின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
உள்ளாட்சித் தேர்தல் வழியாக ஜனநாயகத்தை நிலைநாட்டுவதுடன், நகர்ப்புறங்கள் மற்றும் கிராமங்களில் முழுமையான வளர்ச்சியை கொண்டு வர முடியும் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை காவல் துறை அதிகாரிகள் கையாளும்போது மக்களை உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் கால்பந்து, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானங்களை ஏற்படுத்துவதற்கு இடங்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட வேண்டும்' என்று ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டார் என்று அந்தச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com