தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்: 119 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி

வரும் சட்டப்பேரவை தேர்தலில் தெலங்கானாவின் 119 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் சோம்நாத் பாரதி வெள்ளிக்கிழமை அறிவித்தார். 
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்: 119 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி

வரும் சட்டப்பேரவை தேர்தலில் தெலங்கானாவின் 119 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் சோம்நாத் பாரதி வெள்ளிக்கிழமை அறிவித்தார். 

இதுதொடர்பாக அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் சோம்நாத் பாரதி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

"தெலங்கானா மக்கள் விருப்பம் மற்றும் ஆம் ஆத்மியால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள் அடிப்படையில் தெலங்கானாவின் 119 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. தெலங்கானா உருவாக்கப்பட்டதில் இருந்து டிஆர்எஸ் அரசும் மோடி அரசை போல் ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. அது மக்களுக்கு தெரியும். 

தில்லியில் வழங்கப்படும் வீட்டிற்கே சென்று அரசு சேவைகள் வழங்கும் திட்டம், கல்வித் தரம் மற்றும் ஊழலற்ற அரசு போன்ற சேவைகளை தெலங்கானா மக்களும் விரும்புகின்றனர்" என்றார். 

டிஆர்எஸ் அரசின் பரிந்துரையின் அடிப்படையில் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே கடந்த 6-ஆம் தேதி கலைக்கப்பட்டது. இதனால், அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com