பிகாரில் வார்டனை சுட்டுக்கொன்று விட்டு காவல் இல்லத்தில் இருந்து சிறுவர்கள் தப்பியோட்டம்  

பிகாரில் வார்டனையும், சக நண்பரையும் சுட்டுக்கொன்று விட்டு காவல் இல்லத்தில் இருந்து ஐந்து சிறுவர்கள் தப்பியோடிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
பிகாரில் வார்டனை சுட்டுக்கொன்று விட்டு காவல் இல்லத்தில் இருந்து சிறுவர்கள் தப்பியோட்டம்  

புர்னியா: பிகாரில் வார்டனையும், சக நண்பரையும் சுட்டுக்கொன்று விட்டு காவல் இல்லத்தில் இருந்து ஐந்து சிறுவர்கள் தப்பியோடிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.  

பிகாரின் புர்னியா பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்ககளை போலீஸ் காவலில் இருக்கும் போது வைத்திருக்கும் காவல் இல்லம் ஒன்று உள்ளது. இங்கு வார்டனாக விஜேந்திர மண்டல் (29) என்பவர் பணியாற்றி வருகிறார்.  இந்த இல்லத்தில் புர்னியா நகரிலுள்ள கல்லூரி மாணவர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 17 வயது சிறுவர் ஒருவர் அடைக்கப்பட்டுள்ளார். இவர் உள்ளூரில் பிரபல அரசியவாதியான, ஐக்கிய ஜனதா தளத்தினைச் சேர்ந்த அமரேந்திர குமார் குஷ்வாஹா என்பவற்றின் மகனாவார். 

போதைப் பழக்கதிற்கு அடிமையான இவர் அங்குள்ள மேலும் சில சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு, போதையூட்டக் கூடியது என்பதால் தடை செய்யப்பட்ட  இருமல் மருந்து ஒன்றினை அடிக்கடி அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனை சக இல்ல வாசியான சரோஜ் குமார் (17) என்பர் வார்டனான விஜேந்திர மண்டல் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதனால் வார்டன் அந்த சிறுவனையும் அவனது நண்பர்களையும் கடிந்து கொண்டுள்ளார். 

இந்நிலையில் புதன்கிழமையன்று குறிப்பிட்ட சிறுவர் மற்றுமொரு நண்பருடன் சேர்த்து கொண்டு, தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியினைக் காட்டி வார்டன் மண்டலை மிரட்டி மூடியிருந்த இல்லத்தின் கதவைத் திறக்கச் செய்துள்ளார். அவர்களுடன் மேலும் மூவர் சேர்ந்து கொள்ள மொத்தமாக ஐந்து பேர்  அந்த இல்லத்திலிருந்து தப்பியுள்ளார்கள்

அவர்கள் போகும் போது வார்டன் மண்டல் மற்றும் சிறுவன் சரோஜையும் சுட்டு விட்டுச் சென்று விட்டார்கள். இந்த தாக்குதலில் மேலும் இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். 

தப்பித்து போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதுடன், குறிப்பிட்ட இல்லத்துக்குள் துப்பாக்கி எப்படி வந்தது என்பது தொடர்பாக தனிக்குழு அமைத்து விவசாரணை நடைபெற்று வருவதாக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணுஷர்மா தெரிவித்துள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com