கனமழைக்கு நடுவே பிரஹார் ஏவுகணை சோதனை

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(டி.ஆர்.டி.ஓ.) கனமழைக்கு நடுவே வியாழக்கிழமை சோதனை செய்தது.
ஒடிஸா மாநிலம், பாலாசோரில் இருந்து இலக்கை நோக்கி சீறிப் பாயும் பிரஹார்' ஏவுகணை.
ஒடிஸா மாநிலம், பாலாசோரில் இருந்து இலக்கை நோக்கி சீறிப் பாயும் பிரஹார்' ஏவுகணை.


உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(டி.ஆர்.டி.ஓ.) கனமழைக்கு நடுவே வியாழக்கிழமை சோதனை செய்தது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு உள்நாட்டிலேயே உருவாக்கிய, குறைந்த தொலைவில் தரையிலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கவல்ல, தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணையை ஒடிஸா மாநிலம், சண்டிப்பூரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து வியாழக்கிழமை மதியம் கனமழைக்கு இடையே ஏவி சோதனை செய்தது.
இந்த ஏவுகணை திட எரிபொருளில் இயங்கும் வகையிலும், விரைந்து செயல்பட்டு இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வகையிலும், அனைத்து விதமான காலநிலைகளையும் தாங்கும் வகையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏவுகணையின் பாதையைக் கண்காணிக்க பல்வேறு ரேடார்களும், பல்வேறு கருவிகளும் ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவை தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஏவுகணை சோதனைக்கு முன்பு, சண்டிப்பூரிலுள்ள சோதனை மையத்திலிருந்து 2 கிமீ சுற்றளவுக்குள் அமைந்துள்ள 5 கிராமங்களின் மக்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி, அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, 2 முகாம்களில் தங்கவைக்கப்பட்டதாக மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com