தேர்தல் நேரத்தில்தான் ஆர்எஸ்எஸ்-க்கு ராமர் கோயில் விவகாரம் நினைவுக்கு வரும்'

தேர்தல் நேரத்தில்தான், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அயோத்தி ராமர் கோயில் விவகாரம் நினைவுக்கு வரும் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
தேர்தல் நேரத்தில்தான் ஆர்எஸ்எஸ்-க்கு ராமர் கோயில் விவகாரம் நினைவுக்கு வரும்'


தேர்தல் நேரத்தில்தான், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அயோத்தி ராமர் கோயில் விவகாரம் நினைவுக்கு வரும் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசியபோது, அயோத்தியில் ராமர் கோயில் விரைவில் கட்டப்பட வேண்டும் என்றும், இது ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இடையே பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர உதவும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரியிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
ஆர்எஸ்எஸ் அமைப்பு அல்லது அந்த அமைப்பில் இருக்கும் நபர்களின் மரபணுவை மாற்ற முடியாது. தேர்தல்கள் வரும்போதுதான், அவர்களுக்கு அயோத்தி ராமர் கோயில் நினைவுக்கு வரும்.
ராமர் கோயில் குறித்து பாஜக தலைவர்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் கடந்த 1986ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலும் கருத்துகள் வெளியிட்ட தேதிகளை உற்றுநோக்கினால், அவை அனைத்தும் தேர்தல் நேரத்தில் வெளியிடப்பட்டதை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவு, அயோத்தி ராமர் கோயில் விவகாரம் ஆகியவை தொடர்பான அவர்களது நிலைப்பாடு மாறவில்லை. அதேநேரத்தில், 377ஆவது சட்டப் பிரிவு குறித்த நிலைப்பாடு மட்டும் மாறிவிட்டது என்றார் மணீஷ் திவாரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com