உச்ச நீதிமன்றம் ஆட்கொல்லி புலி' அல்ல: நீதிபதிகள் கருத்து

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தால் மாநில அரசுகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
உச்ச நீதிமன்றம் ஆட்கொல்லி புலி' அல்ல: நீதிபதிகள் கருத்து


உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தால் மாநில அரசுகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், உச்ச நீதிமன்றம் ஒன்றும் ஆட்கொல்லி புலி' அல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்குர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், வழக்கு ஒன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நாங்கள் புலியோ அல்லது வேறெதுவுமோ அல்ல. நாங்கள் ஆட்கொல்லி புலியும் அல்ல. ஆகவே, அவர்கள் (அரசுத் தரப்பு) பயம் கொள்ளத் தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலத்தில் டிரைமெக்ஸ் குரூப் என்ற நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த சுரங்க ஒதுக்கீட்டுப் பணிகளை ஒத்திவைக்க வேண்டும் மாநில அரசு என உத்தரவிட்டது.
இதுதொடர்பாக முன்னாள் அதிகாரி இஏஎஸ் சர்மா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவரது தரப்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார். 
சுரங்க ஒதுக்கீட்டுக்கான உரிமத்தை ஒத்திவைக்கும் உத்தரவை மட்டுமே அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், அந்த உரிமத்தை ரத்து செய்துவிட்டு, அந்நிறுவனத்திடம் இருந்து பணத்தை வசூலிக்க வேண்டும் என்று வாதாடினார்.
இதைத்தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் சார்பில், மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார். ஆந்திர அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சுரங்க ஒதுக்கீடு சட்ட விரோதமானது எனக் கூறுவதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. 
ஆகவே, அரசு பிறப்பித்த ஆணையை எதிர்த்து நாங்கள் மனு தாக்கல் செய்யவுள்ளோம் என்று தெரிவித்தார்.
மேலும், நிறுவனத்துக்கு எதிராக அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதை மனுதாரர்கள் வெற்றி எனக் கொண்டாடுவதாகவும் அவர் கூறினார். 
அப்போது, நீதிபதிகள் குறுக்கிட்டு, ஒன்றிரண்டு நபர்கள் சேர்ந்து நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு மாநில அரசு ஒன்றும் உதவியற்ற நிலையில் இல்லை என்று தெரிவித்தனர். 
மேலும் நீதிமன்றத்தை கண்டு யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com