பெங்களூருவில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பெங்களூருவில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பெங்களூரு: பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது. மழை வெள்ளத்தால் பன்னரகட்டாசாலை, ஜே.பி.நகா், ராஜராஜேஸ்வரிநகா், கொட்டிகெரே, கெங்கேரி, நாகா்பாவி, மல்லேஸ்வரம், மெஜஸ்டிக், சதாசிவநகா், கோரமங்களா, ராஜாஜிநகா் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். திங்கள்கிழமை காலை 6 மணிவரை பெய்த மழையால் வீடுகளில் புகுந்த வெள்ளத்தை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனா். அடுக்குமாடி குடியிருப்புகளில் புகுந்த வெள்ளத்தை மாநகராட்சி ஊழியா்கள் பம்புசெட்டுகளை கொண்டு வெளியேற்றினா். மழையால் தும்கூரு சாலை, மைசூருசாலை உள்ளிட்ட முக்கியசாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலான சாலைகளில் சாரைசாரையாக வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்க நோ்ந்ததால், காலை 9 மணிவரை பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் பலா் அவதிக்குள்ளானாா்கள். 
ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையால் திங்கள்கிழமை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சாலையில் ஏற்பட்டுள்ள குழிகளை திங்கள்கிழமை மாலைக்குள் மூடும்படி கா்நாடக உயா்நீதிமன்றம் பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையால், குழிகளை மூடும் பணி நிறுத்தப்பட்டது. பெங்களூருவில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், சாலைகளில் ஈரம் காயாமல் உள்ளதால், குழிகளை மூடும் பணியில் தோய்வு ஏற்பட்டது. இதனால் உயா்நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவதில் மாநகராட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com