முத்தலாக் அவசர சட்டத்தை எதிா்த்து மும்பை உயா் நீதிமன்றத்தில் மனு 

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த முத்தலாக் அவசர சட்டத்தை எதிா்த்து மும்பை உயா் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  
முத்தலாக் அவசர சட்டத்தை எதிா்த்து மும்பை உயா் நீதிமன்றத்தில் மனு 

மும்பை: மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த முத்தலாக் அவசர சட்டத்தை எதிா்த்து மும்பை உயா் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

இஸ்லாமியர்களிடையே மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து பெறும் நடைமுறை இருந்து வருகிறது. இந்த நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது.   ஆனால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பின் காரணமாக இன்னமும் நிலுவையில் உள்ளது. 

கடந்த மழைக்கால கூட்டத் தொடரின் போதே இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது.  அதன்பொருட்டு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று முத்தலாக் மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனாலும், கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. 

எனவே அவசர சட்டம் மூலம் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 

இந்நிலையில் முத்தலாக் அவசர சட்டத்தை எதிா்த்து மும்பை உயா் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   

முன்னாள் கவுன்சிலர் மற்றும் சமூக பணியாளர் மசூத் அன்சாரி, தொண்டு நிறுவனம் ஒன்று மற்றும் வழக்கறிஞர் தேவேந்திர மிஸ்ரா ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் முத்தலாக் அவசரச் சட்டத்தில் உள்ள விதிமுறைகள் சட்டவிரோதமானது, நியாயமற்றது மற்றும் தன்னிச்சையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனு வரும் 28-ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com