பொதுத் துறை வங்கி தலைவர்களுடன் அருண் ஜேட்லி இன்று ஆலோசனை

பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்த இருக்கிறார்.
பொதுத் துறை வங்கி தலைவர்களுடன் அருண் ஜேட்லி இன்று ஆலோசனை


பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இது வழக்கமாக நடைபெறும் ஆண்டு நிதிச் செயல்பாடுகள் குறித்த கூட்டம்தான் என்றாலும், பொதுத் துறை வங்கிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாராக் கடன் சுமையை எதிர்கொண்டுள்ளன. மேலும், பாங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வங்கிகளை வாராக்கடன் சுமையில் இருந்து மீட்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட இருக்கிறது. 
2017-18-ஆம் நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளின் ரூ.87,357 கோடிக்கு மேல் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. இதில் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் நஷ்டம் மட்டும் ரூ.12,283 கோடியாகும். மொத்தமுள்ள 21 பொதுத் துறை வங்கிகளில் இந்தியன் வங்கி, விஜயா வங்கி தவிர மற்ற எந்த வங்கியும் லாபம் ஈட்டவில்லை. இந்தியன் வங்கி ரூ.1,258.99 கோடியும், விஜயா வங்கி ரூ.727.02 கோடியும் லாபம் ஈட்டின.
பொதுத் துறை வங்கிகளின் நஷ்டத்துக்கு ஊழல்களும், முறைகேடுகளும்தான் முக்கியக் காரணங்களாக உள்ளன. கடன் பெற்றுவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடிய தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர்களுக்கு, பல வங்கி உயரதிகாரிகளும் பல்வேறு வகைகளில் உதவிகரமாக இருந்தனர் என்பதும் கசப்பான உண்மை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com