முதலில் விவசாயிகளின் பிரச்னையை தீருங்கள்: புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியை நிறுத்திய ஜப்பான் நிறுவனம்

பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான புல்லட் ரயில் திட்டத்துக்கான நிதியை ஜப்பான் நிறுவனம் தாற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
முதலில் விவசாயிகளின் பிரச்னையை தீருங்கள்: புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியை நிறுத்திய ஜப்பான் நிறுவனம்


பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான புல்லட் ரயில் திட்டத்துக்கான நிதியை ஜப்பான் நிறுவனம் தாற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

மும்பை - அகமதாபாத் இடையே ரூ.1 லட்சம் கோடி செலவில் திட்டமிடப்பட்ட புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஜப்பான் நிறுவனம், புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதை நிறுத்தியுள்ளது.

நிலத்தைக் கையகப்படுத்தும் விவகாரத்தில் விவசாயிகளின் பிரச்னைகளை முதலில் தீர்த்து வையுங்கள் என்று தெரிவித்துள்ள ஜப்பான் இன்டர்நேஷனல் கோ-ஆப்பரேஷன் ஏஜென்ஸி, புல்லட் ரயிலுக்கான தண்டவாளங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக ஒதுக்கி வந்த நிதியை நிறுத்தியுள்ளது.

இந்த திட்டத்துக்காக ஜப்பான் நிறுவனம் ரூ.80 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி வழங்குவதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை ரூ.125 கோடியை ஒதுக்கியுள்ள நிலையில், தற்போது தாற்காலிகமாக நிதி ஒதுக்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

புல்லட் ரயில் திட்டத்துக்காக நிலத்தை பறிகொடுக்கும் விவசாயிகள் சார்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விவசாயிகள் சார்பில் வாதாடும் வழக்குரைஞர் ஆனந்த்வர்தன் யாக்னிக், விவசாயிகள் பிரச்னை குறித்த  இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் மற்றும் ஜப்பான் நிறுவனத்தின் இந்திய அலுவலக உயர் அதிகாரி உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியிருநதார்.

கடிதம் அனுப்பி 5 நாட்களில், புல்லட் ரயில் திட்டத்துக்கான நிதியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
குஜராத்தில் புல்லட் ரயில் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் மனு
குஜராத்தில் புல்லட் ரயில் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் 1000 விவசாயிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். 

இத்திட்டத்துக்காக தங்கள் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் 5 விவசாயிகள் தாக்கல் செய்த மனு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், மேலும் 1000 விவசாயிகள் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். புல்லட் ரயில் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, நிலம் கையகப்படுத்துவது தொடர்பான சட்டத்தை குஜராத் மாநில அரசு வலுவிழக்கச் செய்துவிட்டதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அரசு தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்றும், ஒருமித்த கருத்தை ஏற்படுத்த நடவடிக்கைவில்லை என்றும் அந்த மனுவில் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு ஏற்கெனவே குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளது.

மும்பை-ஆமதாபாத் இடையே இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜப்பான் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி செலவில் 508 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயிலுக்கான பாதை அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com