ரஃபேல்: ராகுல் காந்தி வெளியிட்ட புதிய விடியோ

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக புதிய விடியோவை வெளியிட்டு, பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.


ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக புதிய விடியோவை வெளியிட்டு, பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
முன்னதாக, ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட்டாளியாக்குவதற்கு இந்திய அரசுதான் பரிந்துரைத்தது என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹெலாந்த் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அவரது பேட்டி அடங்கிய செய்தியை, அந்நாட்டின் மீடியாபார்ட் என்ற இணையவழி ஊடகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்தது.
இதனிடையே, ஹொலாந்தின் பேட்டி தொடர்பாக சந்தேகங்கள் கிளப்பப்பட்ட நிலையில், மீடியாபார்ட் இணையவழி ஊடக ஆசிரியரின் கருத்துகளுடன் கூடிய விடியோவை ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்டுள்ளார். ஹொலாந்தின் பேட்டியை, இணையவழி ஊடக ஆசிரியர் உறுதிபடுத்துவதாக அந்த விடியோ அமைந்துள்ளது.
மேலும், விடியோவுடன் பிரதமர் மோடியை கடுமையாக சாடும் வகையிலான பதிவையும் ராகுல் வெளியிட்டுள்ளார். 
ஆனால், ரஃபேல் விவகாரத்தில் சர்வதேச அளவிலான சதித் திட்டத்தில் ராகுல் ஈடுபட்டுள்ளதாகவும், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹொலாந்துக்கும் அதில் பங்கு இருப்பதாகவும் பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com