வாக்கு வங்கி அரசியல் இந்தியாவை கரையான் போன்று அரித்துவிட்டது: பிரதமர் மோடி

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாஜக பொதுக்கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, கலந்துகொண்டார். 
வாக்கு வங்கி அரசியல் இந்தியாவை கரையான் போன்று அரித்துவிட்டது: பிரதமர் மோடி

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாஜக பொதுக்கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்  ஷா மற்றும் மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் பாஜக ஆளும் மாநிலங்களின் எதிரிகள் போன்று செயல்பட்டனர். அப்போது நானும் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தேன். அச்சமயம் மத்திய அமைச்சர்கள் யாராவது என்னுடன் பரஸ்பர நலன் விசாரித்தாலே அது மறுநாள் பத்திரிகைகளில் செய்தியாகும். அதனால் அந்த அமைச்சர்கள் தங்கள் அரசியல் எதிர்காலம் குறித்து என்று மிகவும் அச்சப்பட்டனர். 

இந்த நிலையில், சுமார் 100 ஆண்டுகளுக்கும் பழமையான காங்கிரஸ் கட்சி தற்போது உதிரிக் கட்சிகளின் நற்சான்றுக்காகவும், கூட்டணிக்காகவும் கையேந்தி நிற்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் அவர்களுக்கு ஏற்பட்ட சரிவு குறித்து ஆலோசித்திருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது. 

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், இங்கு வாக்கு வங்கி அரசியல் காரணமாக முத்தலாக் ஆதரவாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் ஒரு பெண் செயல்பட்டு வந்தாலும், அவருக்கு சக முஸ்லீம் சகோதரிகளின் பாதிப்பு குறித்து கவலையில்லை. 

வாக்கு வங்கி அரசியல் இந்தியாவை கரையான் போன்று அரித்துவிட்டது என்று தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com