ஐவர் கைது விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எங்களது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியிருக்கிறது: தேவேந்திர பட்னவீஸ்  

இடதுசாரி ஆதரவாளர்கள் ஐவர் கைது விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எங்களது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியிருக்கிறது என்று மஹாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்துள்ளார். 
ஐவர் கைது விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எங்களது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியிருக்கிறது: தேவேந்திர பட்னவீஸ்  

முமபை: இடதுசாரி ஆதரவாளர்கள் ஐவர் கைது விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எங்களது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியிருக்கிறது என்று மஹாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிர மாநிலத்தில் பீமா கோரேகான்  பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட மாவோயிஸ சிந்தனை கொண்ட இடதுசாரி ஆதரவாளர்களான எழுத்தாளர் வராவர ராவ், பத்திரிகையாளர் குர்மநாத் கிராந்தி, சுதா பரத்வாஜ், கௌதம் நாவ்லகா, வெர்னோன் கோன்சால்வ்ஸ் மற்றும் அருண் பெரெய்ரா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது தொடர்பாக 5 பேர் தரப்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வெள்ளியன்று தீர்ப்பளித்துள்ளது. 

அதில், சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்று கைது செய்யப்பட்ட ஐந்து பேர் வைத்த கோரிக்கையையும் நிராகரித்துள்ள உச்ச நீதிமன்றம், புனே காவல்துறை மேற்கொண்டு தங்களது விசாரணையை நடத்துமாறு கூறியுள்ளது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஆவணங்களின் அடிப்படையில்தான் ஐவரும்  செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ள நீதிமன்றம், இவர்கள் 5 பேரும் மாறுபட்ட அரசியல் கருத்துகளைக் கொண்டிருப்பதற்காகவே கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை ஏற்க முடியாது என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்த விதமான விசாரணை அமைப்பு வேண்டும் என்பதை கோர முடியாது என்று கருத்துக் கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் ஒருமித்த தீர்ப்பையும், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மாற்றுக் கருத்தையும் பதிவு செய்தார். எனினும் பெரும்பான்மை அடிப்படையில் அதிகபட்ச நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது என்பதால், தீபக் மிஸ்ரா அறிவித்த தீர்ப்பே அறிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டிருக்கும் 5 பேரின் வீட்டுக் காவலை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் இடதுசாரி ஆதரவாளர்கள் ஐவர் கைது விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எங்களது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியிருக்கிறது என்று மஹாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். புணே காவல்துறையினர் தங்களது விசாரணையில் சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே  அந்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த ஆதாரங்கள் அனைதையும் செல்லுபடியாகும் என்று அறிவித்துள்ள நீதிமன்றம் விசாரணையில் தலையிட முடியாதுஎன்றும் அறிவித்துள்ளது. 

இந்த விசாரணையில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்று கூறியுள்ள நீதிமன்றம்,  அரசுக்கு எதிரான எதிர்க்குரல்களை நசுக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் தெளிவுபடுதியுள்ளது. புணே காவல்துறையினருக்கும் நாட்டிற்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி இது. 

இதுவரை இது போன்ற செயல்களில்தான் இடதுசாரி ஆதரவாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விசாரணை முடிவடையவில்லை.     

கைது செய்யப்பட்ட ஐவரும் நமது நாட்டினுள் பெரிய சிவில் யுத்தம் ஒன்றை உருவாக்கத்  திட்டமிட் டத்துடன், பிரதமர் மோடியை கொல்வதற்கான சதிச் செயல் திட்டத்திலும் பங்குபெற்றிருந்தனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.      
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com