கல்வியால்தான் பொருளாதார வளர்ச்சி முழுமையடையும்: பிரதமர் - Dinamani - Tamil Daily News

கல்வியால்தான் பொருளாதார வளர்ச்சி முழுமையடையும்: பிரதமர்

First Published : 17 March 2013 01:20 AM IST


கல்வியறிவு அதிகரிக்கும் போதுதான் பொருளாதார வளர்ச்சி முழுமையடையும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

மேற்கு வங்க மாநிலம் மால்டா நகரில் சனிக்கிழமை நடைபெற்ற கனி கான் செüத்ரி பொறியியல் கல்வி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் மன்மோகன் சிங் பங்கேற்றார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் மன்மோகன் சிங் பேசியது:

அதிக அளவிலான இந்திய இளைஞர்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்ற பொறியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் வர வேண்டும். பொருளாதார வளர்ச்சி என்பது கல்வியறிவுடன் நெருங்கிய தொடர்புடையது. எனவேதான் மத்திய அரசு கல்வியறிவை மேம்படுத்த பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல், பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டுவது என்பது சாத்தியமில்லை.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கல்வியின் பங்கை 3.3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக நாம் உயர்த்தியுள்ளோம். தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் மூலம் 5 கோடி இளைஞர்களுக்கு பயற்சியளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக புதிய மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி, ஐஐஎம், என்ஐஐடி உள்ளிட்டவை உருவாக்கப்படும்.

கனி கான் செüத்ரி கல்வி நிறுவனத்தின் மேம்பாட்டுக்காகவும், இப்பகுதியில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு ரூ.26 கோடி ஒதுக்கியுள்ளது. நாட்டில் உள்ள பிற தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கு சவால் விடும் அளவில் இக்கல்வி நிறுவனம் திகழ வேண்டும் என்பது எனது விருப்பம். உணவு பதப்படுத்துதல், பட்டுப்பூச்சி வளர்ப்பு தொடர்பான கல்விக்கு இங்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் பேசினார்.

காங்கிரஸ் தலைவரான கனி கான் செüத்ரி ரயில்வே அமைச்சராக இருந்தார். அவரது நினைவாக 2010-ம் ஆண்டில் இக்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்தப் பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.