அருண் நேரு மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

First Published : 23 March 2013 04:00 AM IST

ராணுவத்துக்கு கைத் துப்பாக்கி வாங்கியதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான அமர்வு வெள்ளிக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த வழக்கு மீது மார்ச் 30ஆம் தேதி விசாரணை நடைபெறும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 சி.பி.ஐ. விசாரணை நீதிமன்றத்தில் தம் மீது நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் அருண் நேரு மனு செய்தார். ஆனால், மனுவை ஏற்க மறுத்ததையடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

 நேரு சார்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் விகாஸ் சிங் மற்றும் வழக்குரைஞர் சந்தீப் கபூர் ஆகியோர், ""மத்திய அமைச்சர் பொறுப்பு வகித்த அருண் நேரு மீது வழக்கு தொடுப்பதற்கு முன்பு அரசின் அனுமதி பெறப்படவில்லை.

இதன்மூலம் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அலட்சியமாக செயல்பட்டுள்ளது'' என்றனர்.

 அருண் நேரு மீதான முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பது: அருண் நேரு, 1998இல் உள் துறை இணையமைச்சராக இருந்தபோது, ராணுவத்துக்காக செக்கோஸ்லோவாகியாவிலிருந்து கைத் துப்பாக்கி (பிஸ்டல்) வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

இதில் விதிமுறைகள் மீறப்பட்டதால் அரசுக்கு ரூ.25 லட்சம் இழப்பு ஏற்பட்டது. இந்த முறைகேட்டில் உள் துறை முன்னாள் கூடுதல் செயலாளர் பி.பி. சிங்கால் மற்றும் உள் துறை அமைச்சக முன்னாள் இயக்குநர் ஏ.கே. வர்மாவுக்கும் தொடர்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கால் மற்றும் வர்மா இறந்துவிட்டதால் அவர்கள் மீதான வழக்கை சி.பி.ஐ. கைவிட்டுள்ளது.

 கடந்த 2007 ஜூன் 13ஆம் தேதி, அருண் நேரு மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கை முடித்துக் கொள்வதாக சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் சி.பி.ஐ. நீதிமன்றம் அதை ஏற்க மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

A+ A A-

இந்த பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.