எஸ்.எல்.வி. மூர்த்தி
By www.dinamani.com | Published on : 11th April 2015 03:58 PM | அ+அ அ- |
சொந்த ஊர் - நாகர்கோவில். சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியலும், அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர்.
‘மூர்த்தி மார்க்கெட்டிங் அசோசியேட்ஸ்’ நிறுவனத்தை நடத்திவருவதுடன், வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கு உதவிக்கரம், மேனேஜ்மென்ட் ஆலோசனை, பயிற்சிப் பணிகள் எனப் பல பாதைகளில் இவருடைய பயணம் தொடர்கிறது. கிரைன்ட்வெல் நார்ட்டன் கம்பெனியின் பெங்களூரு தொழிற்சாலையின் சேல்ஸ் மேனேஜராகப் பணியாற்றியபோது, ஏற்றுமதியில் சாதனை படைத்து, மத்திய அரசின் பரிசை வாங்கித் தந்தவர்.
முப்பத்துக்கும் மேற்பட்ட கதைகள், ஆங்கிலத்திலும் தமிழிலும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள், 38 புத்தகங்கள் எனப் பல படைப்புகள். தமிழ் மேனேஜ்மென்ட் எழுத்துகளின் முன்னோடி. இவரது தொழில் முனைவோர் கையேடு என்னும் புத்தகம், 2008-ன் சிறந்த பிசினஸ் புத்தகமாகத் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரிசு பெற்றது.