பகுதி 5: எதைச் சாப்பிடலாம்? எதைத் தவிர்க்கலாம்?

பேலியோ டயட் தொடர்புடைய வரலாறு மற்றும் அதன் அடிப்படை விவரங்களை இதுவரை பார்த்தோம். இப்போது பேலியோ உணவுமுறையில் பின்பற்றவேண்டிய விதிமுறைகளைப் பார்த்துவிடலாம்.

பேலியோ டயட் தொடர்புடைய வரலாறு மற்றும் அதன் அடிப்படை விவரங்களை இதுவரை பார்த்தோம். இப்போது பேலியோ உணவுமுறையில் பின்பற்றவேண்டிய விதிமுறைகளைப் பார்த்துவிடலாம்.

பேலியோ டயட்டில் அசைவ பேலியோ, சைவ பேலியோ என இருவகை உண்டு. சைவ பேலியோ முறை, தமிழில் உள்ள பேலியோ டயட் ஃபேஸ்புக் குழுமத்தால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

சரி, அசைவ பேலியோ டயட்டில் என்னென்ன சாப்பிடலாம்?

காலை உணவு: 100 பாதாம் கொட்டைகள். பாதாமை வாணலியில் வறுத்து அல்லது நீரில் 12 மணிநேரம் ஊறவிட்டு தோலுடன் உண்பது சிறந்தது. பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் காலை உணவாக ‘திபெத்திய பட்டர் டீ’ உட்கொள்ளலாம். (அதன் செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)

மதிய உணவு: 4 முட்டைகள். முட்டையை மஞ்சள் கருவுடன் உண்ணவேண்டும். ஆம்லெட், ஆஃப்பாயில் என எப்படி வேண்டுமானாலும் சமைத்து உண்ணலாம். முட்டையுடன் உப்பு, வெங்காயம், தக்காளி போன்றவற்றைச் சேர்க்கலாம்.

மாலைச் சிற்றுண்டி: 1 கோப்பை பால் அருந்த வேண்டும். உடன் கால் கிலோ அளவிலான பேலியோ காய்கறிகளைச் சேர்க்கவேண்டும். காய்கறிகளை சாலட் ஆகவும், வாணலியில் நெய் விட்டு வணக்கி எடுத்தும் உண்ணலாம்.

இரவு உணவு: இறைச்சி எடுத்துக் கொள்ளலாம். இறைச்சியில் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றி இறைச்சி, மீன், தோலுடன் உள்ள கோழி, வாத்து போன்ற இறைச்சிகளைப் பசி அடங்கும் வரை கணக்கு பார்க்காமல் உண்ணலாம்.

தவிர்க்கவேண்டிய இறைச்சி வகைகள்:

கொழுப்பு அகற்றப்பட்ட இறைச்சி வகைகள் தவிர்க்கப்பட வேண்டியவை. (உதா: தோல் அகற்றப்பட்ட கோழி, மற்றும் தோல் அகற்றப்பட்ட மீன்). துரித உணவகங்களில் கிடைக்கும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட, ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட இறைச்சி உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.

கருவாடு (மிதமான அளவுகளில் உண்ணலாம். தினமும் வேண்டாம்).

முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் உண்பது தவிர்க்கப்படவேண்டும். மஞ்சள் கருவுடன் சேர்த்த முழு முட்டையே உண்ணவேண்டும்.

எண்ணெயில் பொறிக்கப்பட்ட இறைச்சியைத் தவிர்க்கவேண்டும்.

சைவர்களுக்கான பேலியோ டயட்:

காலை - மதிய உணவுகளும், மாலைச் சிற்றுண்டியும் அசைவ டயட்டில் இருப்பது போல பாதாம், முட்டை போன்றவற்றை இதிலும் எடுத்துக்கொள்ளலாம். இரவு உணவாக இறைச்சிக்குப் பதிலாக பனீர் மஞ்சூரியன், பனீர் டிக்கா, பனீர் பட்டர் மசாலா போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். இதையும் அளவு பாராது பசி அடங்கும் வரை உண்ணலாம்.

பேலியோவில் தவிர்க்கவேண்டியவை:

உருளைக்கிழங்கு, பீன்ஸ் (அனைத்து வகைகளும்), சுண்டல், பச்சைப் பட்டாணி - பருப்புவகைகள் அனைத்தும், பயறுவகைகள் அனைத்தும், நிலக்கடலை, சோயா, டோஃபு (சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் பால்கட்டி), மீல்மேக்கர், அவரைக்காய், மரவள்ளி, சர்க்கரைவள்ளி,                                                                பனங்கிழங்கு, பலாக்காய், வாழைக்காய், பழங்கள் அனைத்தும் (அவகாடோ எனப்படும் வெண்ணெய்ப்பழம் தவிர்த்து)

என்ன, இதெல்லாம் தினமும் அல்லது அடிக்கடி உண்ணும் உணவுகள், இதை எப்படித் தவிர்ப்ப்பது என்று யோசிக்கிறீர்களா? உடல்நலனா அல்லது நம் விருப்பமா இரண்டில் எது முக்கியம் என முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

பேலியோவில் உண்ணக் கூடியவை:

காளிபிளவர், பிராக்களி (Broccoli), முட்டைகோஸ்,   பாகற்காய், காரட், பீட்ரூட், தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய், கத்திரிக்காய், சுண்டைக்காய், வாழைத்தண்டு, அனைத்துவகைக் கீரைகள், முருங்கை, ஆஸ்பாரகஸ் (Asparagus, அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த காய்கறி வகை. குச்சி போன்று இருக்கும்.), ருபார்ப் (Rhubarb, இளவேல் சீனி), ஆலிவ், செலரி (செலரிக்கீரை), வெள்ளரி, குடைமிளகாய், பச்சை, சிகப்பு மிளகாய், பூசணி, காளான், தேங்காய், எலுமிச்சை, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, மஞ்சள் கிழங்கு,அவகாடோ (Avocado),புடலங்காய்,  இந்த டயட்டில் அரிசி, பருப்பு, கோதுமை, சிறுதானியம் போன்ற அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும். பேக்கரிகளில், உணவகங்களில் விற்கப்படும் உணவுகள், முறுக்கு, சீடை போன்ற பலகாரங்கள், இனிப்பு வகைகள் மற்றும் இதர குப்பை உணவுகள் என இவை அனைத்தையும் அறவே தவிர்க்கவேண்டும். மூன்று வேளையும் வீட்டில் சமைத்த உணவை உண்பதே நலம்.

சமையல் எண்ணெயாக நெய், வெண்ணெய், செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். சாலடுக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாம்.

இதுதான் எடைக் குறைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவற்றைக் குணப்படுத்தும் பொதுவான பேலியோ டயட். சைவர்கள், அசைவர்கள் என இருவரும் பின்பற்றலாம். வசதி உள்ளவர்கள் பாதாம் சேர்க்கலாம், முடியாதவர்கள் பட்டர் டீ உட்கொள்ளலாம். முட்டை கூட சேர்க்காத சைவர்களும் முட்டைக்குப் பதில் பேலியோ காய்கறிகளை உண்டு பயனடைந்து வருகிறார்கள்.

சரி, பட்டர் டீ செய்முறையை இப்போது பார்த்துவிடலாம்.

பட்டர் டீ செய்முறை:

திபெத், மலைகள் நிரம்பிய பகுதி. அங்கே யாக் எனப்படும் எருமை அதிக எண்ணிக்கையில் உள்ளது. யாக் எருமையின் பாலில் எடுக்கபடும் வெண்ணெயை வைத்து திபெத்தியர்கள் பட்டர் டீ தயாரிப்பார்கள். இதை காலை உணவாக அருந்தினால் நாலைந்து மணிநேரத்துக்குப் பசி எடுக்காது. யாக் எருமைக்கு நாம் எங்கே போவது என திகைக்கவேண்டாம். மாட்டுப்பால் வெண்ணெயிலேயே இதைத் தயாரிக்கலாம்.

தேவையான பொருள்கள்:

பால்: 125 மிலி

நீர்: 125 மிலி

வெண்ணெய்: 30 கிராம்

சர்க்கரை: 1/2 தேக்கரண்டி அளவு

டீ தூள்: 1.5 தேக்கரண்டி அளவு

அனைத்து பொருள்களையும் ஒன்றாக பாத்திரத்தில் விட்டுக் கலக்கவும். பிறகு, கொதிக்க விட்டு வடிகட்டி இறக்கவும். எளிய சமையல் முறையில் மிகச் சுவையான பட்டர் டீ தயார்.

இந்த பேலியோ டயட்டில் எடைக் குறைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி தவிர இதர உடல் பிரச்னைகள், வியாதிகளை (உதா: கிட்னி பிரச்னை) கணக்கில் கொள்ளவில்லை. எனவே அதுபோன்ற நோய் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைகள் இன்றி இந்த டயட்டைப் பின்பற்றவேண்டாம்.

மேலும், இது கொழுப்பின் அடிப்படையில் அமைந்த டயட் என்பதால் இந்த உணவுகளை உட்கொள்வதால் கொலஸ்டிரால் அளவுகள் கூடும் வாய்ப்பு உள்ளது. அதற்காக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. கொலஸ்டிரால் உடலுக்கு மிக அத்தியாவசியமான ஒரு மூலப்பொருள். இதனால் உங்கள் இதயத்துக்கு எந்த ஆபத்தும் கிடையாது. வரும் வாரங்களில், கொலஸ்டிரால் பற்றி இன்னும் விரிவாகப் பார்க்கலாம்.

ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்றவற்றுக்கு உடல்பருமனே காரணம் என்று பலர் நம்புகிறார்கள். நிச்சயம் உடல் பருமன் இவற்றுக்குக் காரணம் அல்ல. ஒன்று தெரியுமா, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதிகளுக்கான காரணம் எதுவோ அதுவே உடல் பருமனுக்கும் காரணமாக உள்ளது.

இந்த மூன்றுக்கும் காரணம் இன்சுலின் என்பதைச் சென்ற வாரப் பதிவில் கண்டோம். பேலியோ டயட்டில் இன்சுலின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுவதால் இந்த மூன்றின் சிக்கல்களும் சரியாகி விடுகின்றன.

உங்களுக்குச் சர்க்கரை நோய் இருந்தால், இந்த டயட்டால் சர்க்கரை அளவுகள் (Blood Glucose level) இறங்கும். ஆனால், பேலியோ டயட்டைப் பின்பற்றும்போது முன்புபோலவே இன்சுலின் ஊசியை அதே அளவுகளில் தொடர்ந்து போட்டு வந்தாலோ, அல்லது சர்க்கரை வியாதிக்கான மெட்பார்மின் போன்ற மாத்திரைகளை அதே அளவுகளில் எடுத்து வந்தாலோ உங்களுக்கு ஹைப்போகிளைசெமியா (Low sugar) வரலாம். அதனால் இன்சுலின் ஊசி போடும் சர்க்கரை நோயாளிகள், தங்களுடைய ரத்த சர்க்கரை அளவை (Blood glucose levels) தொடர்ந்து கண்காணித்து, அதற்கு ஏற்ப மருத்துவரிடம் கலந்தாலோசித்து இன்சுலின் ஊசி அளவுகளைக் குறைத்துக்கொள்வது அவசியம்.

உதாரணமாக உங்களுக்கு ஃபாஸ்டிங் சர்க்கரை அளவு (Fasting Glucose levels) 140 மற்றும் வழக்கமான இட்லி, தோசை போன்ற தமிழ்நாட்டு உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவு (Post prandial glucose levels) 200 உள்ளது என வைத்துக்கொள்வோம்.

நீங்கள் பேலியோ டயட்டைப் பின்பற்றினால் உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவு, ஃபாஸ்டிங் சர்க்கரை அளவான 140 என்கிற அளவிலேயே இருக்கும். அல்லது சிறிதளவு மட்டுமே அதிகரித்து 142, 145 என்ற அளவுகளில் மட்டுமே இருக்கும். இந்தச் சூழலில் பழையபடி இன்சுலின் ஊசி எடுத்தால், ஹைப்போகிளைசெமியா வருகிற வாய்ப்பு உண்டு. எனவே, பேலியோ உணவைப் பின்பற்றும் முதல் நாளில் இருந்தே இன்சுலின் ஊசி அளவுகளைக் குறைக்கவேண்டும்.

முட்டையுடன் கூடிய சைவ பேலியோ டயட்டைப் பின்பற்றி உயர் ரத்த அழுத்தத்தை விரட்டியவர், திருமதி. டாலிபாலா. பெங்களூரில் வசிக்கும் 54 வயது இல்லத்தரசியான இவர், சைவ பேலியோ டயட்டைப் பின்பற்றி சுமார் 17 கிலோ வரை எடையைக் குறைத்தது மட்டுமின்றி, பல ஆண்டுகளாக இருந்த உயர் ரத்த அழுத்தப் பிரச்னையிலிருந்தும் மீண்டு வந்துள்ளார். தன் டயட் அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:

வாழ்க்கையில் இனிமேல் உடல் எடை குறையவே குறையாது என்கிற மனநிலையில் இருந்தேன். கூடவே சில உடல் உபாதைகளும் எனக்கு இருந்தது. வேறு ஒரு டயட்டால் என் எடை ஓரளவு குறைந்தாலும் அதனால் வேறுவிதமான உடல் பிரச்னைகள் ஏற்பட்டன. அதனால் அந்த டயட்டைக் கைவிட்டேன். பழைய எடையை மீண்டும் அடைய நேரிட்டது. அப்போதுதான் நானே எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டது.

ஃபேஸ்புக்கில் ‘ஆரோக்கியம் & நல்வாழ்வு’ எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தின் அறிமுகம் கிடைத்தது. அதில் எடைக்குறைப்பு மற்றும் ஆரோக்கிய உடல்நலன் குறித்து படிக்க நிறைய இருக்கும். நியாண்டர் செல்வன் பரிந்துரைத்த தானியம் தவிர்த்த உணவுமுறை என்னை ஆச்சரியப்படுத்தியது. நிறைய கேள்விகளும் தோன்றின. முக்கியமாக இந்த உணவுமுறை, சைவ உணவுமுறையைப் பின்பற்றுபவர்களுக்குச் சரிப்பட்டு வருமா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. உயர் கொழுப்பு உணவு என்று வரும்போது சைவர்களுக்கு அதிகத் தேர்வுகள் இல்லை என்பதால். ஆனாலும் இந்த டயட்டை முயன்று பார்க்கலாம் என்று தோன்றியது. உடல் பிரச்னைகளால் இழந்தது ஏராளம் என்பதால் இனி புதிதாக இழக்க எதுவும் இல்லை என்கிற மனோபாவத்துடனும் கூடவே வீட்டினரின் எதிர்ப்புகளுடனும் இந்த டயட்டைப் பின்பற்ற ஆரம்பித்தேன்.

முட்டை, பாதாம், பனீர், காய்கறி என்று மிகக் குறைந்த அளவு உணவு வகைகளுடன் என்னுடைய பேலியோ டயட் ஆரம்பமானது. செல்வன் தவிர்க்கச் சொன்னதில் மிக முக்கியமானவை - தானியங்கள், சர்க்கரை, மாவுச்சத்து உணவுகள், ஹோட்டல் உணவுகள், நொறுக்குத் தீனிகள் போன்றவை. இதில் எனக்குச் சர்க்கரையைத் தவிர்ப்பது கடினமாக இருக்கவில்லை. காபிக்குச் சர்க்கரை போட்டுக் குடிப்பதில்லை என்பதால். ஆனால் டீ-க்குச் சர்க்கரை சேர்ப்பேன். அதனால் டீ-யைச் சர்க்கரை இல்லாமல் குடிக்க முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. (ஆனால் அதுவும் இப்போது பழகி விட்டது.) அதேபோல காபி குடிக்கவில்லையென்றால் எனக்குத் தலைவலி வரும். இந்த நிலையெல்லாம் இந்தியாவில்தான். அமெரிக்கா போன பிறகு காபியை விட்டு விட்டேன். தலைவலியும் வரவில்லை.  (காபி குடிக்கவேண்டாம் என செல்வன் அறிவுறுத்தினார். காபியால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பதால். பல வருடங்களாக ஒரு நாளைக்கு ஏழெட்டு காபி குடித்துப் பழகியிருந்தாலும் உடல் நலனை முன்னிட்டு காபியை விட்டுவிட்டேன்.)

அரிசியைத் தவிர்ப்பது கஷ்டமாக இருக்கவில்லை. காரணம், வாரம் இரு முறைதான் சாதம் சாப்பிடுவேன். ஆனால், சப்பாத்தி உண்ணாமல் எப்படி இருக்க முடியும்? தினமும் மதியம் ஒன்று அல்லது இரண்டு சப்பாத்தி உண்பது பல வருடப் பழக்கம். முதல் இரண்டு நாள்கள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. எப்படியோ அதையும் தவிர்த்தபடி பேலியோ டயட்டைத் தொடர்தேன். இதனால் எனக்கு எந்தத் தொல்லையும் ஏற்படவில்லை. தானியம் இல்லாத உணவுமுறை தலைவலியை உண்டாக்கும், வாந்தி வரும், மயக்கம் ஏற்படும் என்றெல்லாம் சிலர் பயமுறுத்தினார்கள். ஆனால், எனக்கு அப்படி எதுவும் ஆகவில்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் பசித்தது. பிறகு அதுவும் பழகிவிட்டது. நிறைய காய்கறிகள், பனீர், பாதாம் எல்லாம் உண்பேன். முதலில் முட்டை சாப்பிடுவதை நிறுத்தியிருந்தேன். பிறகு அதையும் சாப்பிட ஆரம்பித்ததால் பசி ஏற்படும் பிரச்னையும் அகன்றது.

பல வருடங்களாக கேல்லோக்ஸ் (kellogs) தான் எனது காலை உணவு . இல்லாவிட்டால் ஓட்ஸ் (oats). இந்த இரண்டு உணவுகளும் என் எடையைக் குறைக்க உதவும் என்று நம்பியிருந்தேன். பேலியோ டயட்டில் சீரியல் உணவுக்கு (breakfast cereal) இடமில்லை. அதனால் அவற்றையும் தவிர்த்தேன். அமெரிக்காவில் இருந்தபோது உணவகங்களில் உண்ணவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கே சைவ உணவு என்றாலே வெறும் இலை, தழை நிரம்பிய சாலட்தான் அதிகம் கிடைக்கும் என்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

பேலியோ உணவு முறையினால், முதல் வாரத்திலேயே பலன் தெரிய ஆரம்பித்தது. உடல் எடை குறைந்தது. ரத்த அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக செட் ஆனது. மாத முடிவில் ரத்தப் பரிசோதனை செய்துகொண்டேன். அளவுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இதனால், பல வருடங்களாக எடுத்துக்கொண்டிருந்த கொலஸ்டிரால் குறைப்பு மாத்திரையான ஸ்டாடினை (statin) நிறுத்தினேன்.

முதல் ஏழு மாதங்களில், கிட்டத்தட்ட பத்துகிலோ எடை குறைந்தது. என் வயதுக்கு இந்த முன்னேற்றம் மிக அதிகம்தான். எடை குறைந்ததால் நடப்பது எளிதாகிவிட்டது. ஆறு கிலோமீட்டர் தொடர்ந்து நடக்க முடிகிறது.

இந்த உணவுப் பழக்கத்தால் எனக்கு ஏற்பட்ட நன்மைகளை இங்கே பட்டியலிடுகிறேன். எல்லா நன்மைகளையும் என்னால் ஞாபகம் வைத்துச் சொல்லமுடியாவிட்டாலும், முடிந்ததைச் சொல்கிறேன்:

54 வயதில் சைவ உணவுப் பழக்கம் கொண்ட நான் முட்டை மட்டும் சேர்த்து கொண்டு இந்த டயட்டைப் பின்பற்றியதால் கிடைத்த நன்மைகள்:

1. எடைக் குறைப்பு. 17 கிலோ.

2. முதலில் உயர் ரத்த அழுத்தத்தின் அளவு மூன்று மாத்திரைகளுடன் 140/90 என்றிருந்தது. ஆனால், பேலியோ டயட்டால் மளமளவென 110/70க்குச் சரிந்தது. இன்று வரை இதே அளவுதான். ஒரே ஒரு மாத்திரை மட்டுமே இப்போது எடுத்துக்கொள்கிறேன்.  ‘ரத்த அழுத்தம் இறங்கி நார்மலாக ஆனாலும், சில வருடங்கள் மாத்திரையை நிறுத்தவேண்டாம்’ என மருத்துவர் அறிவுறுத்தியதால் ஒரு மாத்திரையை மட்டும் உட்கொள்கிறேன். பத்து ஆண்டுகளாக மாத்திரை எடுத்து வருவதால், அதை மெதுவாகத்தான் நிறுத்தவேண்டும் என்பது என் மருத்துவரின் பரிந்துரை. ஆனால் என்னுடைய ஃபிரஷர் அளவுகள் நார்மலாகவே உள்ளன.

3. இதயத்துடிப்பு மிக அதிகமாக இருந்ததால் அதற்காகப் பல வருடங்களாக எடுத்துவந்த மாத்திரையையும் இரண்டு மாதங்களுக்கு முன்பு நிறுத்திவிட்டேன்.

4. கொலஸ்டிரால் அளவைக் குறைக்கும் ஸ்டாட்டின் (Statin) என்கிற மாத்திரையைப் பல வருடங்களாக எடுத்துக் கொண்டிருந்தேன். பேலியோ டயட்டின் தைரியத்தில் அதையும் நானே நிறுத்திவிட்டேன். பிறகு, என் மருத்துவரும் அதற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார். ரத்தப் பரிசோதனை அறிக்கையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

5. அடுத்தபடியாக என் தோல் நல்ல பளபளப்பாக மாறியுள்ளது. இது நானாகச் சொல்லவில்லை. நண்பர்களின் கருத்து.

6. முன்பு, நடைப் பயிற்சியில் என்னால் ஒரு கிலோமீட்டருக்கு மேல் நடக்கமுடியாது. இப்போது சர்வ சாதாரணமாக ஆறு கிலோமீட்டருக்கு மேல் நடக்கிறேன்.

7. எனக்குக் கொஞ்சம் ஹார்மோன் பிரச்சனை உண்டு. அதன் பாதிப்பும் வெகுவாகக் குறைந்துள்ளது.

8. உடல் சோர்வு ஏற்படுவதில்லை.

9. காலில் தசைப்பிடிப்பு அடிக்கடி வரும். அது சுத்தமாகக் குறைந்துவிட்டது.

10. முதலில் இருந்த பல் வலித் தொந்தரவும் இப்போது குறைந்துவிட்டது. நூறு பாதாம் தினமும் சாப்பிடுகிறேனே!

இப்படிப் பல விதங்களில் எனக்கு நன்மைகள். பேலியோ டயட் என்பது வெறும் டயட்டாக மட்டும் இல்லாமல், என் வாழ்க்கை முறையாகவும் மாறிவிட்டது.

டாலிபாலா அவர்களின் எடைக் குறைப்புக்கு முந்தைய/பிந்தைய புகைப்படங்கள் இவை. முதல் படம் - பிப்ரவரி மாதம் 2013ம் ஆண்டு அவர் பேலியோ டயட்டை ஆரம்பிக்கும் முன்பு எடுக்கப்பட்டது. இரண்டாவது படம் - ஜூலை 2015.

எவ்வளவு வித்தியாசம், முன்னேற்றம்!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com