நியாண்டர் செல்வன்

நியாண்டர் செல்வன்

ஃபேஸ்புக்கில் ‘ஆரோக்கியம் & நல்வாழ்வு’ எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருபவர். இக்குழுவில், ஆதிமனிதன் உண்ட உணவை ஒட்டிய உணவுமுறை மூலம் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, உடல் பருமன் போன்ற பல நோய்கள் மற்றும் உடல் சார்ந்த பிரச்னைகளுக்குமான டயட் முறைகளும் தீர்வுகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் குழுவில் சுமார் 20,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பலரும் இந்த உணவு முறையால் நல்ல பலனைக் கண்டுள்ளார்கள். பேலியோ டயட் (முன்னோர் உணவு) என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் இந்த உணவுமுறை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பெருமளவில் பின்பற்றப்பட்டு வருகிறது. நியாண்டர் செல்வன், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளைப் பற்றி கடந்த பத்து ஆண்டுகளாக வலைப்பதிவிலும், ஃபேஸ்புக்கிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அவருடைய ஃபேஸ்புக் முகவரி –

https://www.facebook.com/neander.selvan

ஆரோக்கியம் & நல்வாழ்வுக் குழுமத்தின் ஃபேஸ்புக் முகவரி –

https://www.facebook.com/groups/tamilhealth/

குறிப்பு

இந்த பேலியோ டயட் உணவு முறை குறித்த விழிப்புணர்வை முன்னெடுத்துள்ள நியாண்டர் செல்வன், அங்கீகாரம் பெற்ற மருத்துவரோ, டயட்டீஷியனோ, உணவு, உடல்நலன் துறைகளில் எவ்வகைப் பட்டமும் பெற்றவரோ அல்லர். முழுக்க, முழுக்க சொந்த ஆர்வத்தில் உணவு, உடல்நலன் சார்ந்த நூல்களைப் படித்து அதில் உள்ள கோட்பாடுகளைத் தன் உணவு முறையில் பின்பற்றி, அதில் தனக்குக் கிடைக்கப்பெற்ற பலன்களையும், நன்மைகளையும் பலரிடம் பகிர்ந்துகொள்ள ஃபேஸ்புக் குழுமத்தை தொடங்கி நடத்தி வருகிறார். பேலியோ டயட் முறையைப் பின்பற்ற விரும்புவர்கள், உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, அதன்படி செயல்படவும்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை