கையில் அள்ளிய நீர்

கையில் அள்ளிய நீர்

“பகிர்தல் இயற்கையின் நன்னெறி” அவ்வளவே. ஆனால் அவ்வளவும்.

சினிமா அனைத்து கலைகளையும் வாழ்வையும் உறிஞ்சும் ஒரு மகா நுண்ணுயிர். தொடர். அதுவும், சினிமா கட்டுரைத் தொடர். அதுவும் சுவாரஸ்யமும் நெகிழ்வுமாகப் பகிர வேண்டும் என்ற அவா. பிரியங்களை சுகிக்க சினிமா ஒரு பெரும் பாலம் எப்பொழுதும். அதுவே இத்தொடரின் நோக்கம். முரண்களோடும் ஒத்திசைவோடும் நகரும் மனித நதியை வேடிக்கை பார்க்கும் கலைகளின் ஒரு குழந்தைதான் சினிமா. யாருக்குத்தான் அக்குழந்தையின் மழலையைக் கேட்க விருப்பம் இருக்காது. அள்ள முயற்சிக்கிறேன்; கொஞ்சமேனும் உள்ளங்கைகளில் தேங்கும் இந்தச் சுனை நீர் எனும் நம்பிக்கையில். நூறு வருடங்களை கடந்திருக்கிறது தத்தித் தத்தி தவழும் இந்த சினிமா மகவு. திரைக்கதை – நடிப்பு – ஒளிப்பதிவு – எடிட்டிங் - இசை போன்ற அடிப்படை செயல்கள் கொண்ட ஒரு திரைப்படம், எழுத்து – காட்சி - சப்தம் வழியாக வெளிப்படுகிறது. இவற்றின் மூலாதாரம் “மனமே மந்திரம்”. வாருங்கள் மனம்கோர்த்துப் பிரயாணிப்போம்.

பாலசுப்ரமணி சடையப்பன்

பாலசுப்ரமணி சடையப்பன்

பாலசுப்ரமணி சடையப்பன். கோவை ராமகிருஷ்ண மடத்தில் பள்ளிப்படிப்பு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ., அழகப்பா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. மாஸ் கம்யூனிகேசன் & ஜர்னலிஸம் பயின்றவர். திரைப்படம், இலக்கியம், ஓவியம், இசை, நாடகம் ஆகிய கலைகளில் தீவிர ஈடுபாடும் செயல்பாடும் உள்ளவர். முகநூல் போன்ற சமூக வலைதள ஊடகங்களில் ஆன்ட்ரே பாசின், தெல்யூஸ், பெலபெலாஸ், செர்கே எய்ஸன்ஸ்டீன் போன்ற ஃபிலிம் தியரிஸ்டுகளின் நுண்ணறிவுகளையும், உலகத் திரை விமரிசனங்களையும், திரை நுட்பங்களையும், மேலும் தமிழ் இலக்கிய சிறுகதைகளுக்கு திரைக்கதைகளையும் எழுதி வருகிறார்.

மக்கள் தொலைக்காட்சியில் ‘உலகத்திரை' என்னும் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார். ‘திரைக்கலை ஆசானும் கத்துக்குட்டி மாணவனும்' என்ற தலைப்பில் ஃபிலிம்மேக்கர் பாலுமகேந்திராவிடம் அவரின் பள்ளியில் (balu mahendra institute of filmaking technology) திரைப்பாடம் (film-making course) படித்த மற்றும் அவரின் ‘தலைமுறைகள்' திரைப்படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்த அனுபவங்களை முகநூலில் (https://www.facebook.com/balasubramani.sadayappan) எழுதி வருகிறார். தொடர்ந்து பணிவோடும் அன்போடும் திரை இலக்கணங்களை ஆழமாக கருத்தூன்றி கற்று வருபவர். அப்படி கற்பவற்றை இவர் ஆரம்பித்து நடத்திவரும் ‘பாலும்கேந்திரா ஃபிலிம் சொசைட்டி'-யில் (https://www.facebook.com/balumahendrafilmsociety/?ref=aymt_homepage_panel ) திரையிட்டு இலவசமாக பகிர்ந்து வருகிறார். 

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை