நலம் நலமறிய ஆவல்

ஆரோக்கியத்தைக் காசு கொடுத்து வாங்க முடியுமா? காசு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ஆரோக்கியத்தை எங்குமே வாங்க முடியாது. ஏனெனில் அது விற்பனைக்கான பொருளே அல்ல. அது நம்மிடம்தான் உள்ளது. நம் தவறான வாழ்முறைகளால் நாம்தான் அதைக் கெடுத்துக்கொண்டிருக்கிறோம். நம் கழிவறை முழுக்கத் தங்கமாக இருந்தாலும், ஆரோக்கியமில்லாவிட்டால் நம் வாழ்வே ஒரு கழிவாகிவிடும். சுத்தம் சோறு போடும். ஆரோக்கியம் அனைத்தும் தரும். உடலையும் மனதையும் ஆரோக்கியாமாக வைத்திருந்தால் மருத்துவர்களுக்கும், மருத்துவ மனைகளுக்கும், மருந்துகளுக்கும், அறுவை சிகிச்சைகளுக்கும் வேலை இல்லாமல் போய்விடும். அந்த பொற்காலம் நம் கையிலும் வாயிலும்தான் உள்ளது. என் அனுபவத்திலிருந்து உங்களுடன் கொஞ்சம் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த ‘நலம், நலமறிய ஆவல்’.

நாகூர் ரூமி

நாகூர் ரூமி

இயற்பெயர் முஹம்மது ரபி. புனைபெயர்: நாகூர் ரூமி. கல்வித்தகுதி: எம்.ஏ., பிஎச்.டி., கம்பன் - மில்டன் காவியங்களில் ஒப்பாய்வுக்காக, சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்டம். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், சுயமுன்னேற்றம், மதம், ஆன்மிகம், வாழ்க்கை வரலாறு, தமிழாக்கம் என 43 நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம்’ நூலுக்கு 2004-ம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும், ஹோமரின் ‘இலியட்’ காவிய மொழிபெயர்ப்புக்கு 2009-ம் ஆண்டுக்கான நல்லி திசையெட்டும் மொழியாக்க விருதும் கிடைத்தது. கணையாழி தொடங்கி கல்கி, விகடன், குமுதம் என எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதியுள்ளார். இணையத்திலும் எழுதுகிறார். www.nagorerumi.com என்ற இவரது வலைத்தளத்திலும் இவரது ஆக்கங்களைப் படிக்கலாம். ஆம்பூர், மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றும் இவர், சென்னையில் பல ஆண்டுகளாக ஆல்ஃபா தியான வகுப்புகளை நடத்தி வருகிறார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கருத்துகளைப் பரிமாறியுள்ளார். தினமணி ஜங்ஷனில், வரலாறு படைத்த வரலாறு என்ற தொடரை எழுதியுள்ளார்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை