மத்திய அரசின் நடவடிக்கையால் சாமானிய மக்கள்தான் மிகப்பெரிய அளவில் பயன்பெறுவார்கள். முகேஷ் அம்பானி 

500 ரூபாய் 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததோடு தொடர்ந்து கருப்புப் பண ஒழிப்பு
மத்திய அரசின் நடவடிக்கையால் சாமானிய மக்கள்தான் மிகப்பெரிய அளவில் பயன்பெறுவார்கள். முகேஷ் அம்பானி 

500 ரூபாய் 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததோடு தொடர்ந்து கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையல் சாமானிய மக்கள்தான் மிகப்பெரிய அளவில் பயன்பெறுவார்கள் என்று ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது: ரூ.500, மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் துணிச்சலான, வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை நான் வாழ்த்துவதோடு பாராட்டவும் செய்கிறேன்.

இதைச் செய்ததன் மூலம், இந்தியாவில் மின்னணு நடைமுறை சார்ந்த பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஓர் ஊக்கத்தை நமது பிரதமர் அளித்துள்ளார். இந்த நடவடிக்கையானது மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட உதவும். நேர்மையான, வெளிப்படையான, வலுவான இந்தியாவும், இந்தியப் பொருளாதாரமும் உருவாக மின்னணு சார்ந்த பணப் பரிவர்த்தனைகள் வழிவகுக்கும்.

ஒவ்வொரு நிலையிலும் முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு நம்பகத்தன்மையை இந்த நடவடிக்கை கொண்டுவரும். இந்த மாற்றத்தால் சாமானிய மக்கள்தான் மிகப்பெரிய அளவில் பயன்பெறுவார்கள்.

ரொக்கமற்ற பொருளாதார நடைமுறைக்கு மாறுவதும், மின்னணு முறையில் பணம் செலுத்தும் நடைமுறையும் அத்தியாவசியத் தேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்துவது, வங்கிகளில் பணம் செலுத்துவது - பணம் எடுப்பது ஆகியவற்றுக்காக வரிசையில் காத்திருப்பதற்கு முடிவுகட்டும்.

இதன் மூலம் மிச்சமாகும் நேரமானது பணம் ஈட்டப்படுவதற்குச் சமமாகும். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற இந்த ஒற்றை நடவடிக்கையின் மூலம் முடங்கிக் கிடந்த ஏராளமான பணத்தை பிரதமர் வெளிக்கொண்டு வந்துள்ளார்.

இது நமது பொருளாதாரத்தில் பணப் புழக்கத்தையும், கடன்கள் அளிக்கப்படுவதையும் அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com