பஜாஜ் ஆட்டோ விற்பனை 13 சதவீதம் குறைந்தது

பஜாஜ் ஆட்டோ விற்பனை 13 சதவீதம் குறைந்தது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நவம்பர் மாத விற்பனை 13 சதவீதம் குறைந்தது. இதுகுறித்து

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நவம்பர் மாத விற்பனை 13 சதவீதம் குறைந்தது. இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில்  தெரிவித்துள்ளதாவது:

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சென்ற நவம்பரில் 2,69,948 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 3,09,673 வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது 13 சதவீதம் குறைவாகும்.

மோட்டார்சைக்கிள் விற்பனை 2,70,886 என்ற எண்ணிக்கையிலிருந்து 12 சதவீதம் சரிவடைந்து 2,37,757-ஆக இருந்தது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 17 சதவீதம் வீழ்ச்சி கண்டு 32,191-ஆக காணப்பட்டது.

மேலும்,ஏற்றுமதியும் 1,37,315 என்ற அளவிலிருந்து 16 சதவீதம் சரிந்து 1,15,425-ஆக இருந்தது என்று பஜாஜ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com