தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதாக வெளியான தவறான செய்தியால் போக்குவரத்து நிறுத்தம்,கடைகள் அடைப்பு

தேனி மாவட்டம் உத்தமபாளையம்,சின்னமனூர் பகுதியில் திங்கள் கிழமை மாலையில் காட்சி ஊடகங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா

தேனி மாவட்டம் உத்தமபாளையம்,சின்னமனூர் பகுதியில் திங்கள் கிழமை மாலையில் காட்சி ஊடகங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானதாக வெளியான தவறான செய்தியால் திடீர் பதற்றமான சூழ்நிலையால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு திடீரென  ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திங்கள் காலை முதல் சிக்சை அளித்ததை தொடர்ந்து நண்பகலில்  மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அந்த மருத்துவமனை தெரிவித்தது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலையில் இயல்பு வாழ்க்கை சீராகவே இருந்தது.

அதன் பின்னர் மாலையில் அனைத்து காட்சி ஊடகங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தி காட்டு தீ போல் பரவியதால் உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் அதனை சுற்றியுள்ள பகுதியில் திடீரென பதற்றமான சூழ்நிலை நிலவியது.

உடனே காவல் துறையினர் அனைத்து கடைகளையும் அடைக்குபடி தெரிவித்தனர். மேலும் குறைந்த அளவில் இயங்கிய பேருந்துகள் உடனே நிறுத்தப்பட்டன. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.

பேருந்துகள் இயங்காத நிலையில்  ஆட்டோக்களை பயன்படுத்தி பொதுமக்கள் அவசர அவசரமாக  தாங்கள் செல்லவேண்டிய ஊர்களுக்கு திரும்பினர். வெளீயூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் செய்வதறியாத  பேருந்து நிலையத்திலே காத்திருந்தனர்.

ஆனால் சிறிது நேரத்தில் ஊடங்களில் வெளியானது செய்து தவறானது என தெரிவந்ததை தொடர்ந்து  பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். கடைகள் திறக்கப்பட்டு பொதுமக்கள் அச்சமின்றி நடமாட தொடங்கினர்.

ஆனால் பேருந்துகள் இயங்கவில்லை, டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்ப்டடன.மேலும் பெட்ரோல் பங்குகளில் கூடுதலாக வாகங்கள் குவிந்து அதிகளவில் பெட்ரோல் மட்டும் டீசலை நிறப்பிச்சென்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com