தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

முதல்வரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு பாதுகாப்பு பணியில் சுமார் 1.20 லட்சம் போலீஸர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

சென்னைக்கு பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவ படை வீரர்கள் வந்துள்ளனர். அதேபோல சட்டம் மற்றும் ஒழுங்கு பணிக்கு 2 ஐ.ஜி.கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதுகாப்பு பணியில் சுமார் 15 ஆயிரம் போலீஸர் ஈடுபடுகின்றனர்.

மேலும் கூடுதலாக 11 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவ படை வீரர்கள் சுமார் 2 ஆயிரம் சென்னைக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் திங்கள்கிழமை இரவு முதல் அரசியல் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com