திருவாரூரில் கடைகள் அடைப்பு: பேருந்துகள் நிறுத்தம்

முதல்வரின் உடல்நிலை குறித்து பரவிய செய்தியையடுத்து திருவாரூரில் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டன.

திருவாரூர், 

முதல்வரின் உடல்நிலை குறித்து பரவிய செய்தியையடுத்து திருவாரூரில் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். 

தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து திங்கள்கிழமை காலை முதல் தகவல் வெளி யானதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. மதியம் 3 மணிக்கெல்லாம் பள்ளி மாணவ, மாணவி கள் வீட்டுக்கு திரும்பினர். 

இதையடுத்து மாலை 5.30 மணியளவில் ஊடகங்களில் முதல்வர் ஜெயலலிதா காலமான தாக வெளியான செய்தியடுத்து மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் வணிக கடைகல் அடைக்கப்பட்டன. பேருந்துகள் நிறுத்தப்பட்டன. திருவாரூர் பேருந்து நிலையத்துக்கு வந்த பேருந்துகள் அருகிலுள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டன. அப்போது பேருந்துகாக காத்திருந்த பயணிகள் பாதிக்கப்பட்டன.

சிறிதுநேரத்தில் முதல்வர் காலமானதாக வெளியான செய்தி தவறானது என்று தெரிய வந்ததையடுத்து குறிப்பிட்ட சில பேருந்துகள் இயக்கப்பட்டன. பிறகு நிலைய இயல்பு நிலைக்கு திரும்பியது. திருவாரூர் பேருந்து நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அதிமுகவினர் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சோகத்துடன் நின்று கொண்டிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com