நாளை வழக்கம் போல் பால் கிடைக்கும்: தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவிப்பு

முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூலம் ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னை
முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூலம் ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து இசிஎம்ஓ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தமிழகம் முழுவதும் அசாதரண சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் நாளை பால் கிடைக்காது என்பது உட்பட பல வதந்திகள் பரவியது. இதையடுத்து வழக்கம் போல் நாளை பால் விநியோகம் செய்யப்படும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் தமிழக முதல்வர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாளை பால் கிடைக்காது என்னும் தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com