அப்பல்லோ மருத்துவமனையில் ஜாமர் கருவி: பத்திரிகையாளர்கள்-போலீஸார் அவதி

முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டதால் பத்திரிகையாளர்களும், போலீஸரும் அவதிக்குள்ளாகினர். 

சென்னை,

முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஜாமர் கருவி பொருத்தப்பட்டதால் பத்திரிகையாளர்களும், போலீஸôரும் அவதிக்குள்ளாகினர்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு போலீஸôர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

அந்த மருத்துவமனை வளாகத்தில் முதல்வரின் உடல்நிலை தொடர்பாக செய்தி சேகரிக்க 500-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களும், பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீஸôரும் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் முதல்வரின் உடல்நிலை குறித்த வதந்திகளை தடுக்கும் வகையில் அப்பல்லோ மருத்துவமனையின் வளாகத்தில் செல்லிடப்பேசிகளை கட்டுப்படுத்தும் ஜாமர் கருவியை சென்னை பெருநகர போலீஸர் பொருத்தினர்.

இதனால் அந்த வளாகத்தில் கூடியிருந்த செய்தியாளர்களால் மருத்துவமனையின் கள நிலவரம் குறித்த தகவலை தங்களது அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அதேபோன்று செய்தியில் உள்ள சந்தேகங்கள் குறித்து கேட்கவும், கூடுதல் தகவல் பற்றி அறியவும் மருத்துவமனையில் உள்ள செய்தியாளர்களை பத்திரிகை நிறுவனங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஒவ்வொரு முறையும் முதல்வர் உடல்நிலை குறித்த தகவலை தங்களது அலுவலகத்துக்கு தெரிவிப்பதற்காக மருத்துவமனை வளாகத்திலிருந்து செய்தியாளர்கள் வெளியே செல்ல வேண்டியிருந்தது. இதனால் போலீஸôர்-பத்திரிகையாளர்களிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com