சென்னை உள்பட முக்கிய நகரங்களில் அரசு பேருந்து சேவை முடக்கம்

சென்னை உள்பட முக்கிய நகரங்களில் நகரப் பேருந்து சேவை திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு மேல் முடங்கியது. 

சென்னை

சென்னை உள்பட முக்கிய நகரங்களில் நகரப் பேருந்து சேவை திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு மேல் முடங்கியது. 

  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த வதந்தி திங்கள்கிழமை பிற்பகல் முதலே வேகமாகப் பரவத் தொடங்கியது. இதைத்  தொடர்ந்து, பள்ளி-கல்வி, தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டன. 


இந்த நிலையில் சென்னை மாநகரப் பேருந்துகள் பிற்பகல் 3 மணிக்கு மேல் சேவையை படிப்படியாகக் குறைக்கத் தொடங்கின. புறப்பட்ட இடத்திலிருந்து சேரவேண்டிய இடத்துக்கு வழக்கத்தைக் காட்டிலும் இரு மடங்கு நேரம் ஆனது. 

 உதாரணமாக, வேளச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து டி70 பேருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு அம்பத்தூர் தொழிற்பேட்டையைச் செல்லும். ஆனால், அதைவிட ஒரு மணி நேரம் கூடுதலாக அதாவது 5.30 மணிக்கு சேருமிடத்தை அடைந்தது.

மேலும், மாலை 5 மணிக்கு மேல் மாநகரப் பேருந்து சேவை முற்றிலுமாக முடங்கியது. இதனால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல பேருந்து நிறுத்தங்களில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

பேருந்துகள் வராததால் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் பொதுமக்கள் பயணித்தனர். இதனால் அவற்றில் கூட்டம் அதிகரித்தது. இந்த நிலைமையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தனர்.

 இதுகுறித்து கோயம்பேட்டைச் சேர்ந்த மாணவர் சுரேஷ்குமார் கூறியதாவது:-
 வழக்கமாக அசோக்பில்லரில் இருந்து கோயம்பேட்டுக்கு ஆட்டோவில் செல்ல ரூ.60 வரை வசூலிப்பார்கள்.

ஆனால் தற்போது பேருந்துகள் எதுவும் இல்லாததால் வழக்கமான கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக அதாவது ரூ.120 கொடுக்கும்படி கேட்டனர். அவசர வேலையாக செல்வதால் ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்ட தொகையைக் கொடுக்க வேண்டியிருந்தது என்றார்.

  ந்த நிலை சென்னை மட்டுமின்றி கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் நீடித்தது. பேருந்து சேவை முடக்கப்பட்டதாலும் பிற போக்குவரத்து வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாலும் பொதுமக்கள் அதிக சிரமத்துக்குள்ளாகினர். நகர்ப்புற பேருந்து சேவை முடக்கம் திங்கள்கிழமை இரவு வரை நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com