24, 31-ல்புதுச்சேரி-சந்திரகாச்சி இடையே  சுவிதா சிறப்பு ரயில் இயக்கம்

புதுச்சேரி-சந்திரகாச்சி இடையே (சென்னை எழும்பூர் வழியாக) சுவிதா சிறப்பு ரயில் வரும் 24, 31 தேதிகளில் இயக்கப்படுகிறது.

புதுச்சேரி,
புதுச்சேரி-சந்திரகாச்சி இடையே (சென்னை எழும்பூர் வழியாக) சுவிதா சிறப்பு ரயில் வரும் 24, 31 தேதிகளில் இயக்கப்படுகிறது.

புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயில் எண்.82612, வரும் 24, 31 தேதிகளில் (சனிக்கிழமை) இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சந்திரகாச்சியை சென்றடையும்.

இச்சிறப்பு சுவிதா ரயிலில் குளிர்சாதன வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டி 1, மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி 1, படுக்கை வசதிக் கொண்ட பெட்டிகள் 7, இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 6, சரக்கு மற்றும் பிரேக் வேன்பெட்டி 2 உள்ளி்டவை இடம் பெற்றிருக்கும்.

ரயில் நிற்குமிடம்:

விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், கூடுர், நெல்லூர், ஓங்கோல், சிராளா, தெனாலி, விஜயவாடா, எலூரு, தாடேபள்ளிகூடம், ராஜமன்றி, சாமல்கோட், துவ்வாடா, விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ரோடு, பலாசா, பிராமாபூர், குர்தாரோடு, புவனேஸ்வரம், கட்டாக், பத்ராக், பாலசோர், கரக்பூர்.

இச்சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என தெற்கு ரயில்வே திருச்சிக் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com