மின்னணு பணப் பரிமாற்ற முறை: சந்திரபாபு நாயுடு தலைமையிலான முதல்வர்கள் குழு இன்று கூடுகிறது

மின்னணு பணப் பரிமாற்ற முறையை மேம்படுத்துவதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர்கள், நிபுணர்கள் அடங்கிய குழுவின் முதல் கூட்டம்

மின்னணு பணப் பரிமாற்ற முறையை மேம்படுத்துவதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர்கள், நிபுணர்கள் அடங்கிய குழுவின் முதல் கூட்டம் மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
 இதுகுறித்து ஆந்திர மாநிலம், அமராவதியில் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு புதன்கிழமை கூறியதாவது:
 அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அத்துடன், ரொக்கப் பரிவர்த்தனைக்கு மாற்றாக மின்னணு பணப் பரிவர்த்தனை முறைக்கு இந்தியாவை மாற்ற வேண்டியது குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படும்.
 தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிப்பதற்கு மின்னணு முறை பணப் பரிவர்த்தனை சிறந்த தீர்வாக அமையும். ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒருவருக்காவது மின்னணு பணப் பரிவர்த்தனை குறித்து கற்பிக்க வேண்டும் என்றார் அவர்.
 மின்னணு முறை பணப் பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "மாற்றம் தவிர்க்க முடியாதது. ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு இருப்பதால், சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், நமது தேசம் மின்னணு பொருளாதாரத்துக்கு மாற வேண்டியது தவிர்க்க முடியாதது' என்று சந்திரபாபு நாயுடு பதிலளித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com