ரூ.2000 வரை டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு சேவை வரியில்லை

ரூ.2000 வரை டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு சேவை வரி இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரூ.2000 வரை டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு சேவை வரியில்லை

ரூ.2000 வரை டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு சேவை வரி இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க, மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி நள்ளிரவு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மக்களிடம், ரொக்கமற்ற மின்னணு பரிவர்த்தனைகளை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com