ராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ்

ராமேசுவரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்து வந்த மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ராமேசுவரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்து வந்த மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வெள்ளிக்கிழமையுடன் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ராமேசுவரம் தீவு மீனவர்களின் வசதிக்காக நடமாடும் ஏ.டி.எம். ஏற்படுத்தித் தர வேண்டும்,செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் மாற்றிக்கொண்டு பிரச்சினையில்லாமல் பணப்பரிவர்த்தனை செய்து கொள்ள மீனவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்ககைளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள்.

இதனால் மீன்கள் ஏற்றுமதி வர்த்தகம் ரூ.10 கோடிக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீன்பிடி தொழிலும் முடங்கத் தொடங்கியது.ராமேசுவரம் பகுதியில் உள்ள சுமார் 860க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளில் பணி செய்யும் தொழிலாளர்கள் பலரும் தொழில்நசிவு காரணமாக வெளிமாநிலங்களுக்கு செல்லத் தொடங்கினார்கள்.இதன் காரணமாக படகுகளை இயக்குவதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டது.

இந்நிலையில் ராமேசுவரம் தீவு மீனவர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கும் அலுவலகத்தில் அவசரமாக கூடியது.இக்கூட்டத்தில் மீனவர் சங்கநிர்வாகிகள் என்.ஜே.போஸ்,ஜேசுராஜ்,தேவதாஸ், சகாயம் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படுவதால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com