பாஜக அமைச்சரின் காரில் 91 லட்சம் பறிமுதல்: ஒப்பு கொள்கிறார் அமைச்சர் சுபாஷ் தேஷ்முக்

மகராஷ்டிர மாநில பாஜக அமைச்சரின் காரில் இருந்து 91 லட்ச ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டு பணம் குறித்த
பாஜக அமைச்சரின் காரில் 91 லட்சம் பறிமுதல்: ஒப்பு கொள்கிறார் அமைச்சர் சுபாஷ் தேஷ்முக்

மும்பை: மகராஷ்டிர மாநில பாஜக அமைச்சரின் காரில் இருந்து 91 லட்ச ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டு பணம் குறித்த விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக சுபாஷ் தேஷ்முக் கூறியுள்ளார்.

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு கடந்த 8-ஆம் தேதி தடை விதித்தது. மேலும், மக்கள் தங்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் இந்த மாத இறுதிவரை செலுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், கணக்கில் காட்டாத கருப்புப்பணத்தை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தால், வருமான வரித்துறையினரிடம் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், கருப்பு பணம் வைத்திருக்கும்பண முதலைகள் பலர் அந்த பணத்தை வேறு வழிகளில் வெள்ளைப் பணமாக மாற்ற முயற்சித்து அதற்கான நடவடிக்கைகளில் செயல்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து கருப்பு பணத்தை கைப்பற்றுவதற்காக நாடு முழுவதும் வாகன சோதனைகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மகராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற வாகன சோதனையின்போது, அம்மாநில பாஜக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சரான சுபாஷ் தேஷ்முக் என்பவருக்கு சொந்தமான வணிக நிர்வணத்திக்கு சொந்தமான வாகனத்தில் இருந்து சுமார் 91 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுககளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.  

மேலும் காரை ஓட்டி வந்த ஓட்டுநரிடம் விசாரிக்கப்பட்டதில் சரியான ஆவணங்கள் எதையும் அவர் வழங்கவில்லை, இதனையடுத்து அவரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுறித்து 24 நேரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு அமைச்சரின் வணிக நிறுவனமான லோக்மங்கலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையடுத்து கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு அதிரடி கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பாஜக அமைச்சரின் காரில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அனைத்து மட்டத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், பாஜக அமைச்சர் சுபாஷ் தேஷ்முக், கருப்பு பணத்தை சட்டவிரோதமாக மாற்ற முயற்சித்ததாக, அம்மாநில எதிர்கட்சிகள் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனக்கு சொந்தமான காரில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் குறித்த விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், அந்த பணத்திற்கு தகுந்த ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சுபாஷ் தேஷ்முக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
"நான் எனது தொழிலில் அரசியல் பின்னணி ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. நான் அரசியலில் சேருவதற்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபல தொழிலதிபராக இருந்து வந்துள்ளேன். மிகவும் நேர்மையான வழியில் வணிக நிறுவனங்களை நடத்தி வருகிறது எனது குடும்பம். நாங்கள் அனைத்து வரிகளையும் முறையாக செலுத்தி வருகிறோம். மாநகர சபை தேர்தலில் பயன்படுத்த செல்லப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்களின் விவகாரம் போது அமைச்சர் கூறினார்.

பிடிப்பட்ட தொகையானது கரும்பு தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக நவம்பர் 5-ஆம் தேதி லோக்மங்கல் வங்கியின் சோலாப்பூர் தலைமையகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகள் அறிவிப்புக்கு பிறகு மீண்டும் டெபாசிட் செய்வதற்காக கொண்டுவரப்பட்டிருக்கலாம் என விளக்கமளித்துள்ளார்.

எனினும், காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேலவை உறுப்பினருமான தனஞ்சய் முண்டே, இச்சம்பவம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளதால் தேஷ்முக் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com