மதுரை, நெல்லையில் ரூ.30 கோடியில் உயிரி எரிவாயு மையம்: மத்திய தோல் ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானி பி.சண்முகம் தகவல்

மதுரை மற்றும் நெல்லையில் ரூ.30 கோடியில் உயிரி எரிவாயு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது என சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சிக்கழக மூத்த விஞ்ஞானி பி.சண்முகம் கூறினார்.

மதுரை,

மதுரை மற்றும் நெல்லையில் ரூ.30 கோடியில் உயிரி எரிவாயு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது என சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சிக்கழக மூத்த விஞ்ஞானி பி.சண்முகம் கூறினார்.

மதுரையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கணிதத்துறை கருத்தரங்கில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இயற்கை பருவநிலை மாற்றம் என்பது அறிவியலை உள்ளடக்கியது. அறிவியலை மதிப்பெண் அóடிப்படையில் பார்க்காமல், வாழ்வியலாகவே பார்க்கவேண்டும். அறிவியல் விழிப்புணர்வு பெற்றால் உடல்நலம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாக்கமுடியும்.

 கார்பன்டை  ஆக்சைடு அதிகரிப்பதாலே சுனாமி போன்ற பேரழிவு நிகழ்கிறது. உணவு கழிவுகளால் கார்பன் டை ஆக்சைடு அதிகரிக்கிறது. ஆகவே உணவு கழிவை எரிசக்தியாக்கி அதை வாழ்வியல் பயன்பாட்டுக்குரியதாக்கினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கமுடியும்.
 வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தித் துறை மூலம் உயிரி கழிவு சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இறைச்சிக் கழிவுகளில் உள்ள கொழுப்பிலிருந்து உயிரி எண்ணெய் தயாரித்து அதை வாகனங்களுக்கு பயன்படுத்த உள்ளோம். உயிரி எண்ணெய் மூலம் ரயிலையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

 நெல்லையில் ரூ.20 கோடியில் உயிரி எரிவாயு மையம் அமைக்க மத்திய எரிசக்தித்துறை அனுமதி அளித்துள்ளது. நெல்லையில் அமையும் மையத்தின் மூலம் தினமும் 50 ஆயிரம் லிட்டர் உயிரி எண்ணெய் தயாரிக்கப்படும். 

 மதுரையில் திடக்கழிவுகள் மூலம் எரிவாயு தயாரிக்கும் திட்டம் ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. வெப்பத்தை தடுக்கவும், மாற்று எரிசக்தி மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் எதிர்கால ஆய்வுகள் பயன்படவேண்டும். அதற்கு கல்வியை பார்த்தல், உணர்தல், அறிதல் எனும் முறையில் மாணவர்களுக்கு கற்பித்தல் அவசியம் என்றார். 

 முன்னதாக அவர் டோக் பெருமாட்டி கல்லூரி வளாகத்தில் நடந்த கணிதத்துறை கருத்தரங்கில் அன்றாட நிகழ்வில் அறிவியல் எனும் தலைப்பில் பேசினார். மாணவியரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com