தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

சென்னை, 

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

 தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் 14.47 லட்சம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சுமார் 2 லட்சம் ஹெக்டேரில் நிலத்தடி நீரை நம்பியும், 12 லட்சம் ஹெக்டேரில் நேரடி விதைப்பு மூலமும் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

இந்தப் பயிர்களை வெற்றிக்கரமாக அறுவடை செய்ய ஜனவரி மாத இறுதி வரை காவிரி நீர் வர வேண்டியது அவசியம். மேட்டூர் அணையில் 32 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. அணையின் இருப்புக்கு வைக்க வேண்டிய 20 டி.எம்.சி. போக மீதமுள்ள தண்ணீரை திறந்துவிட்டால், 12 நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்க முடியும்.

கர்நாடக அணைகளில் இருந்து கணிசமான அளவு தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா பயிரைக் காப்பாற்ற முடியும். கர்நாடக அணைகளின் நீர் இருப்பு 24 டி.எம்.சிக்கும் கீழ் குறைந்தால் உச்சநீதிமன்றமே ஆணையிட்டாலும் தமிழகத்துக்கு ஒரு சொட்டு கூட தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கூறியிருக்கிறார்.

கர்நாடக அணைகளில் 26 டி.எம்.சி  மட்டுமே தண்ணீர் உள்ள நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகும். இதனால் விவசாயம் பொய்த்துப் போய்விடும்.  எனவே, காவிரி பாசன மாவட்டங்களையும், சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற மாவட்டங்களையும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும். 

முதல்வர் அறிவுரையா?: முதல்வரால் செயல்பட முடியாத நிலையில் அரசு நிர்வாகம் தடையின்றி இயங்க நிதியமைச்சருக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது சரியானதாகும். எனினும், ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதல்வரின் அறிவுரைப்படிதான் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. 

ஆனால, ஆளுநருக்கு முதல்வர் எந்த முறையில் அறிவுரை வழங்கினார் என்பது தான் தமிழகத்திலுள்ள ஏழரை கோடி மக்களின் மனதில் எழுந்துள்ள வினாவாகும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com