இடைத்தேர்தல்: செந்தில் பாலாஜி, கே.சி.பழனிசாமி போட்டியிட தடை கோரி வழக்கு!

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுகவைச் சேர்ந்த கே.சி.பழனிசாமி ஆகியோர் போட்டியிட
இடைத்தேர்தல்: செந்தில் பாலாஜி, கே.சி.பழனிசாமி போட்டியிட தடை கோரி வழக்கு!

சென்னை: அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுகவைச் சேர்ந்த கே.சி.பழனிசாமி ஆகியோர் போட்டியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2016 மே மாதம் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வந்த புகார்களையடுத்து, இரு தொகுதிகளிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் செந்தில் பாலாஜியும், திமுக சார்பில் கே.சி.பழனிசாமியும் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், நவம்பர் 19-ஆம் தேதி இந்த 2 தொகுதிகளுடன், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக தலைமை நேற்று புதன்கிழமை அறிவித்தது.

அதில், தஞ்சாவூரில் எம். ரெங்கசாமியும், அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜியும் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி, கே.சி.பழனிசாமி ஆகியோர் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அரவக்குறிச்சி தொகுதிக்குட்ட அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு இன்று தொடர்ந்துள்ளார்.

அவர் தொடர்ந்து வழக்கில், அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த தொகுதியில் செந்தில்பாலாஜி, கே.சி.பழனிசாமி போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com