ஒரே நாளில் 6 லட்சம் ஏடிஎம் கார்டுகள்  முடக்கம்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

ஒரே நாளில் சுமார் 6 லட்சம் டெபிட் ஏடிஎம் கார்டுகளை பாதர ஸ்டேட் வங்கி முடக்கியுள்ளது.
ஒரே நாளில் 6 லட்சம் ஏடிஎம் கார்டுகள்  முடக்கம்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

மும்பை: ஒரே நாளில் சுமார் 6 லட்சம் டெபிட் ஏடிஎம் கார்டுகளை பாதர ஸ்டேட் வங்கி முடக்கியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் மையங்களின் பரிவர்த்தனைகளில், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதால் நேற்று ஒரே தினத்தில் 6.26 லட்சம் ஏடிஎம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

ஏடிஎம் கார்டுகள் முடக்கப்பட்டதை வாடிக்கையாளர்களுக்கும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும், விரைவில் அவர்களுக்கு புதிதாக ஏடிஎம் டெபிட் கார்டுகள் வழங்கப்படும் என்றும் வங்கி அறிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் இந்தியாவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான ஷிவ் குமார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஏடிஎம் மையங்கள் தீங்குநிரல் (Malware) பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 லட்சம் ஏடிஎம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்கு  விரைவில் தீர்வு காணப்பட்டு சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com