மாண்புமிகு ஆளுநர் என அழையுங்கள்! தமிழக ஆளுநர் அலுவலகம் உத்தரவு

தமிழக ஆளுநரை இனிமேல் மாண்புமிகு ஆளுநர் என அழைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

சென்னை
தமிழக ஆளுநரை இனிமேல் மாண்புமிகு ஆளுநர் என அழைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

மேலும் இதுகுறித்து ஆளுநருக்கான முதன்மை செயலர் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: -

தமிழக ஆளுநரை மேதகு ஆளுநர் (the salutation " His Excellency the Governor ") என அழைப்பதற்குப் பதில் இனி 'மாண்புமிகு ஆளுநர்' (' Hon 'ble Governor ) என விழாக்களில் அழைக்க வேண்டும்.

அரசு தொடர்பான பணிகளுக்கும் மாண்புமிகு ஆளுநரே என அழைக்க வேண்டும். வெளிநாட்டு பிரமுகர்களுடனான நிகழ்வில் மேதகு ஆளுநர் என அழைக்கலாம் எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com