முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வரட்டும்; பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்: நடிகர் கமல்ஹாசன்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று வரும்வரை தன் பிறந்தநாள் விழாக்களை தவிர்க்குமாறு, தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வரட்டும்; பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்: நடிகர் கமல்ஹாசன்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற்று வரும்வரை தன் பிறந்தநாள் விழாக்களை தவிர்க்குமாறு, தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசன் வரும் நவம்பர் 7-ஆம் தேதி தனது 63வது பிறந்த நாளை சந்திக்க உள்ளார். இதையொட்டி அவரது நற்பணி இயக்கம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும் ஏராளமான நலத்திட்ட உதவிகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த ஆண்டு தனது பிறந்த நாள் விழாக்களை தவிர்க்குமாறு, நற்பணி இயக்கத் தோழர்களுக்கும், ரசிர்களுக்கும் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாடுவது நன்றாக இருக்காது என்று ரசிகர்கள், நற்பணி மன்றங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக முதல்வர் உடல்நிலை விரைவில் குணமடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com