இடைத்தேர்தல் எதிரொலி: மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்ட சோதனை

நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தல் எதிரொலியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சோதனை அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் ரெட்டியார்பாளையம் தேர்தல் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்

புதுச்சேரி,

நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தல் எதிரொலியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட சோதனை அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் ரெட்டியார்பாளையம் தேர்தல் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் வரும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்திசேகர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். வேட்பு மனுத்தாக்கல் புதன்கிழமை தொடங்கி நவம்பர் 2-ம் தேதி வரை நடக்கிறது.

இடைத் தேர்தலில் மொத்தம் 26 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல் கட்ட சோதனை ரெட்டியார்பாளையம் தேர்தல் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. துணை மாவட்ட ஆட்சியர் பா.தில்லைவேல் முன்னிலை வகித்தார்.

அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலகத்தில் பரிசோதிக்கப்பட்டன. முதல் கட்டமாக 100 இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் 1000 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டன.

இவற்ரில் இருந்து 26 இயந்திரங்கள் வாக்கு பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் 4 இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். விரைவில் இரண்டாம் கட்ட சோதனை நடத்தப்பட்டு எந்தெந்த வாக்குச்சாவடிகளுக்கு எந்தெந்த இயந்திரங்களை ஒதுக்குதவது என சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படும்.


இத்தேர்தலில் விவிபாட் முறை பின்பற்றப்படவில்லை. காங்கிரஸ் சார்பில் வழக்குரைஞர் சிவசாமி, அதிமுக அந்துவான்சூசை, என்ஆர் காங்கிரஸ் வேல்முருகன், திமுக சார்பில் ஸ்ரீதர், உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com