திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி வேட்பு மனுத்தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி தாலுகா அலுவலகத்தில் கேமிராக்கள் அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி வேட்பு மனுத்தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி தாலுகா அலுவலகத்தில் கேமிராக்கள் அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு நவ.19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பு மனுத்தாக்கல் திருநகர் 8 ஆவது பஸ் நிறுத்தத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் இன்று(புதன்கிழமை)துவங்குகிறது.

 இதற்காக தாலுகா அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தாலுகா அலுவலகத்தின் உள்புறம், வெளி கேட் பகுதி உள்ளிட்ட 5 இடங்களில் வெப் கேமிராக்கள் பொறுத்தப்படுகிறது. வேட்பு மனுத்தாக்கல் முடிந்தவுடன் மனுவை ஸ்கேன்செய்து தேர்தல் ஆணையத்திற்கு உடனுக்குடன் அனுப்பவும் ஏற்பாடுகள் நடக்கிறது.

மனுத்தாக்களின்போது வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கவும், அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் கட்சி வாகனங்களை நிறுத்தவும்  
போதுமான போலீஸôர் பாதுகாப்பு வழங்க மதுரை போலீஸ் கமிஷனரிடம் தாலுகா சார்பில் கேட்கப்பட்டுள்ளது.

 இன்று முதல் நவ.2 ஆம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனுத்தாக்கல் நடக்கிறது. இதில் நவ.29 மற்றும் 30 ஆம் தேதி விடுமுறை. வேட்பு மனுத்தாக்கல் இன்று துவங்கவுள்ளதால் செவ்வாய்க்கிழமை இருவர் படிவங்களை பெற்றுச்சென்றனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com