பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தை அணுக சைரஸ் மிஸ்ட்ரி முடிவு

பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தை அணுக சைரஸ் மிஸ்திரி முடிவு செய்துள்ளார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தை அணுக சைரஸ் மிஸ்ட்ரி முடிவு

பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தை அணுக சைரஸ் மிஸ்திரி முடிவு செய்துள்ளார்.

டாடா சன்ஸ் நிறுவனம், சர்வதேச அளவில் டாடா குழுமத்தின் துணை நிறுவனங்கள் மற்றும் வர்த்தகப் பணிகளை நிர்வகித்து வருகிறது. இந் நிறுவனத்தின் தலைவராக கடந்த 2012-ஆம் ஆண்டில் சைரஸ் மிஸ்ட்ரி (48 வயது) நியமிக்கப்பட்டார். ஷர்போஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவரான பலோன்ஜி மிஸ்ட்ரியின் இரண்டாவது மகன் தான் சைரஸ் மிஸ்திரி. டாடா குழுமத்தில் இவருடைய தந்தை ஓய்வு பெற்ற பிறகு 2006-ம் ஆண்டு நிர்வாக குழுவில் இணைந்தார்.

அதன் பிறகு டாடா குழுமத்தின் பல நிறுவனங்களுக்கு இயக்குநராக இருந்து வந்தார். டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா ஓய்வை அறிவித்த போது, ஐந்து பேர் கொண்ட நிர்வாகக் குழு 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் சைரஸ் மிஸ்திரியை தலைவராக தேர்ந்தெடுத்தது. சைரஸ் மிஸ்திரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து “நல்ல தொலைநோக்குடைய தேர்வு” என்று ரத்தன் டாடா குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் நேற்று நடந்த நிர்வாக குழு கூட்டத்தில் டாடா குழும தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உரிய விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. எனினும், சைரஸ் மிஸ்ட்ரி லாபம் ஈட்டக்கூடிய வர்த்தகப் பணிகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், இதனால் ரத்தன் டாடா போன்றோர் அதிருப்தி அடைந்தனர் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்தே, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

சைரஸ் மிஸ்ட்ரியை தொடர்ந்து, டாடா சன்ஸ் நிறுவனத்தின் இடைக்கால தலைவராக, அடுத்த 4 மாதங்களுக்கு ரத்தன் டாடா செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டாடா சன்ஸ் நிர்வாகக் குழு புதிய தலைவரைத் தேர்வு செய்ய ஒரு தேர்வு குழுவை அமைத்துள்ளது.

டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவில் ரத்தன் டாடா, வேணு சீனிவாசன், அமித் சந்திரா, ரோனன் சென் மற்றும் குமார் பட்டாச்சார்யா போன்றோர் உள்ளனர். இந்த குழு அடுத்த நான்கு மாதங்களில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவுள்ளார்கள்.

இந்நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தை அணுக சைரஸ் மிஸ்ட்ரி முடிவு செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com