மதுரையில் அதிமுக கவுன்சிலர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரையில் அதிமுக கவுன்சிலர் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச்சென்றதாக செவ்வாய்க்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.

மதுரை, 

மதுரையில் அதிமுக கவுன்சிலர் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச்சென்றதாக செவ்வாய்க்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது.

மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகரில் உள்ள மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த அய்யாப்பழம் மகன் ஜெயக்குமார்(45). மாநகராட்சி 30-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்தார்.

மருதுபாண்டியர் நகரில் உள்ள வீட்டில் தாய், தந்தை மற்றும் அண்ணன் ஜெயச்சந்திரன் குடும்பத்தினர், ஜெயக்குமாரின் குடும்பத்தினர், தம்பி ஜெயசேகரின் குடும்பத்தினர் ஆகியோர் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்துள்ளனர். நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜெயக்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் வீட்டில் அனைவரும் திங்கள்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் முன்பகுதியில் வெடிச்சப்தம் கேட்டதால் அனைவரும் விழித்துள்ளனர். 

இதில் ஜெயக்குமார், அவரது அண்ணன் ஜெயச்சந்திரன், தம்பி ஜெயஸ்ரீதர் ஆகியோர் வீட்டின் முன்பகுதிக்குச் சென்று பார்த்தனராம். அப்போது வீட்டின் முன்பாக துணி ஒன்று எரிந்துள்ளது. மேலும் பாட்டில் உடைந்து கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடந்ததாம். அதில் இருந்து பெட்ரோல் வாடையும் வந்ததாம். மேலும் கதவின் மீது வீசியதில் கதவும் லேசாக சேதமடைந்திருந்ததாம். 

இதுதொடர்பாக ஜெயக்குமார் அளித்தப் புகாரின்பேரில் அண்ணாநகர் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீஸôர் சென்று தடயங்களை சேகரித்தனர். 

அதிமுக பொருளாளரும் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மதுரை வரும் நிலையில் அக்கட்சியின் கவுன்சிலர் வீடு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com