சமாஜ்வாடி கட்சியில் தொடரும் பூசல்: அமைச்சர் பவன் பாண்டே நீக்கம்

உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் பவன் பாண்டே, ஒழுங்கு நடவடிக்கையாக அவரை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி

லக்னெள: உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் பவன் பாண்டே, ஒழுங்கு நடவடிக்கையாக அவரை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் சமாஜ்வாடியின் தேசிய தலைவரான முலாயம்சிங்.
சமாஜவாதி கட்சிக்குள் பூசல் வலுத்து வரும் நிலையில், அதைத் தெளிவுபடுத்தும் விதமாக சமாஜ்வாடி கட்சியில் பூசல்கள் தொடர்கிறது.
முலாயம் சிங்கின் தம்பியான சிவபால் யாதவ் உள்பட 4 அமைச்சர்களை அகிலேஷ் யாதவ் அண்மையில் பதவிநீக்கம் செய்தார். அதற்குப் பதிலடியாக, அகிலேஷ் யாதவின் ஆதரவாளரும், மற்றொரு தம்பியுமான ராம்கோபால் யாதவை முலாயம் சிங், கட்சியில் இருந்து நீக்கினார். இதைத் தொடர்ந்து அகிலேஷ் யாதவ் - சிவபால் சிங் இடையே பனிப்போர் வெடித்தது.
இதற்கு தீர்வு காண கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தை நேற்று முன்தினம் கூட்டினார். இந்த கூட்டத்தில் முலாயம் சிங் முன்னிலையிலேயே மோதல் ஏற்பட்டதால் கட்சி கூட்டம் பாதியிலேயே முடிந்து போனது. இதையடுத்து, சமரச முயற்சி நடைபெற்று வந்தது. இதன் பலனாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட 4 அமைச்சர்களையும் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கட்சியிலும், குடும்பத்திலும் எந்தவிதமான பிளவும் ஏற்படவில்லை என்றும் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம் என்றும் முலாயம் சிங் யாதவ் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் பவன் பாண்டேவை, ஒழுங்கு நடவடிக்கையாக அவரை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் சமாஜ்வாடியின் தேசிய தலைவரான முலாயம் சிங்.
அகிலேஷ் யாதவின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் பவன் பாண்டே நீக்கப்பட்டது மீண்டும் கட்சியில் பூசலை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com