சந்திரபாபு நாயுடுவுக்கு கொலை மிரட்டல்

ஆந்திரம், ஒடிஸா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் உள்ள மல்கான்கிரி மாவட்டத்தில் உள்ள ராம்குர்ஹா
சந்திரபாபு நாயுடுவுக்கு கொலை மிரட்டல்

ஹைதராபாத்: ஆந்திரம், ஒடிஸா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் உள்ள மல்கான்கிரி மாவட்டத்தில் உள்ள ராம்குர்ஹா வனத்தில் கடந்த 24-ஆம் தேதி இரு மாநில போலீஸாருடனான துப்பாக்கிச் சண்டையில் 7 பெண் தீவிரவாதிகள் உள்பட 24 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், நக்ஸல்களின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரு காவலர்கள், விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்த இடத்திலிருந்து ஏ.கே.47 ரகத்தைச் சேர்ந்த 4 இயந்திரத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன

இந்நிலையில், விஜயவாடாவில் உள்ள அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ஆந்திர மாநில பிரதிநிதி ஷாம் என்ற பெயரில் ஒரு கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதத்தில், ஆந்திர, ஒடிசா எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 24 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் சேர்ந்து செயல்பட்டுள்ளனர். இதற்காக சந்திரபாபு நாயுடுவும், அவரது மகன் லோகேஷ் உரிய பலனை அனுபவிப்பார்கள். தேவைப்பட்டால் சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் மீது தற்கொலைப்படை மூலம் தாக்குதல் நடத்தப்படும்.

வெளிநாட்டினர் இங்கு முதலீடு செய்ய வனங்கள் மற்றும் மலைகளை ஆக்கிரமித்து கொடுத்து வருகின்றன மத்திய, மாநில அரசுகள். இதற்காக மலைப்பகுதியில் வசிக்கும் கிரிஜன மக்களை வெளியேற்றி வருகின்றனர்.

இதற்கிடையே மாவோயிஸ்ட்கள் கடந்த 2 நாட்களாக கூட்டம் நடத்தி வந்ததை அறிந்த போலீஸார் உளவாளிகளை கொண்டு, மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு கொண்டு வந்த உணவில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து அவர்களை போலீஸார் தங்கள் வசப்படுத்தி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி சுட்டுக்கொன்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் போலீசாருக்கு உதவியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பட்டியல் தயார் நிலையில் உள்ளது. அவர்களுக்கு உரிய நேரத்தில் பாடம் புகட்டுவோம் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com