சிரியாவில் பள்ளிக்கூடம் மீது பயங்கர தாக்குதல்: 22 குழந்தைகள், 6 ஆசிரியர்கள் பலி

சிரியாவில் பள்ளிக்கூடம் மீது நிகழ்த்தப்பட்ட வான்வழித்தாக்குதலில் 22 குழந்தைகள், 6 ஆசிரியர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்,
சிரியாவில் பள்ளிக்கூடம் மீது பயங்கர தாக்குதல்: 22 குழந்தைகள், 6 ஆசிரியர்கள் பலி

பெய்ரூட்: சிரியாவில் பள்ளிக்கூடம் மீது நிகழ்த்தப்பட்ட வான்வழித்தாக்குதலில் 22 குழந்தைகள், 6 ஆசிரியர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஷியாவின் படைகள் இணைந்து ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்தின் ஹாஸ் கிராமத்தின் மீது சிரிய மற்றும் ரஷ்ய படைகள் நேற்று வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 22 குழந்தைகள், 6 ஆசிரியர்கள் உள்பட 35 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலை நடத்தியது ரஷிய படைகளா? இல்லை சிரிய படைகளா? என்பது உறுதியாகத் தெரியவில்லை. இதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யுனிசெப்பின் இயக்குநர் அந்தோனி லேக் கூறுகையில், இது ஒரு போர்க்குற்றம் என்றும், மிகக் கொடூரமான செயல்பாடு என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இட்லிப் நகர் ஹாஸ் கிராமத்தில் தாக்குதல் தொடங்கிதை அறிந்த பள்ளி நிர்வாகம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இதையடுத்து மாணவர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த போது, பள்ளி நுழைவு வாயிலில் திடீரென்று ஒரு ராக்கெட் குண்டு வந்து விழுந்துள்ளது. இதனால் மாணவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர் என்று உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.

சிரியாவில் கடந்த மார்ச் 2011-ஆம் ஆண்டு முதல், 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்த வான்வழித் தாக்குதல் தொடர்ந்து ஆறு முறை நடைபெற்றதாகவும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com