கை மாறிய குழந்தை ஐந்து மாதங்களுக்குப் பிறகு தாயிடம் சேர்ந்த அதிசயம்!

வெளிநாடுகளில் இருந்து தூதஞ்சல் மூலமாக இந்தியா வந்த ஊக்கமருந்து, சிறிய ரக பறக்கும் கருவி (ட்ரோன்), போலி துப்பாக்கிகள்

சிம்லா: சிம்லாவில் ஐந்து மாதங்களுக்கு முன் மருத்துவமனையில் மாறிய குழந்தை மீண்டும் தனது தாயிடமே வந்து சேர்ந்துள்ளது.
கடந்த மே 26-ஆம் தேதி சிம்லாவின் கமலா நேரு மருத்துவமனையில் ஷீத்தல் என்ற பெண் பிரசவத்தவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தர். அதே நாளில் அஞ்சனா என்ற பெண்ணும் பிரசவத்தவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ஷீத்தலுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரின் கையில் ஒரு பெண் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த ஷீத்தல், மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
ஆனால், அதை அவர்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இதனால், இமாச்சல பிரதேச நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். இதனால் அஞ்சனாவை அழைத்து விசாரித்த நீதிபதிகள், குழந்தைகளுக்கு டி.என்.ஏ., சோதனை செய்து பெற்றோரை உறுதி செய்யும்படி உத்தரவிட்டது.
இதையடுத்து டி.என்.ஏ., சோதனை நடத்தப்பட்டதில், அஞ்சனாவிக்கு பெண் குழந்தை பிறந்ததும், ஷீத்தலுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது உறுதி செய்ததை அடுத்து, உரியவர்களிடம் அவரவர்களுக்குரிய குழந்தைய ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு குழந்தைகள் தங்களின் உண்மையான பெற்றோர்களிடம் வந்து சேர்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com