என்.எல்.சி-ல் தீபாவளி விழா: ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து அனுப்ப ஆச்சார்யா வேண்டுகோள்

நெய்வேலி, என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சார்பில் தீபாவளி பண்டிகை விழா மத்திய தொழிலக பாதுகாப்புப்படை தலைமை அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நெய்வேலி, 

நெய்வேலி, என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சார்பில் தீபாவளி பண்டிகை விழா மத்திய தொழிலக பாதுகாப்புப்படை தலைமை அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. வீழாவில் பேசிய என்.எல்.சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யா ராணுவ வீரர்களுக்கு வாழத்து அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார்.

என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தில் பல மொழி பேசும், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களிடையே சமூக மற்றும் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்த பல்வேறு விழாக்கள் நிறுவனத்தின் சார்பில் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை வகித்த என்எல்சி தலைவர் சரத்குமார் ஆச்சார்யா, தீபாவளி கொண்டாட்டங்களை தொடங்கி வைத்து பேசியதாவது:

தீபாவளித் திருநாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாட, இந்தியக் குடிமக்கள் அனைவரும் நமது முப்படை வீரர்களுக்கு வாழ்த்துகளை அனுப்ப வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி அறைகூவல் விடுத்துள்ளார். இதனை ஏற்று நாம் அனைவரும், நாட்டை பாதுகாத்து வரும் வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை அனுப்ப வேண்டும். நாம் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதற்காக, தங்கள் வாழ்நாளை செலவிட்டு வரும் நமது போர் வீரர்களுக்கு, நமது வணக்கத்தை செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

நமது நாடு எப்போதும் அமைதியை விரும்புகிறது. எனினும் நமது இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் விட்டுக் கொடுப்பதில்லை. நமது நாட்டினைக் காக்க, தங்கள் வாழ்நாளை செலவிடும் வீரர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிப்பதற்கு இது சரியான தருணம் என பேசினார்.
  
விழாவில், இயக்குநர்கள் ராக்கேஷ் குமார், சுபீர்தாஸ், தங்கபாண்டியன் மற்றும் உயர் அதிகாரிகள், கலாசார சங்கங்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்கம் மற்றும் பொறியாளர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com