மாநகரில் காற்று மாசு கண்டறியும்  மையங்கள் எண்ணிக்கை: அதிகரிப்பது குறித்து 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு

மாநகரில் காற்று மாசு கண்டறியும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த சாத்திய கூறுகளை ஆராய்ந்து 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர்ந

மாநகரில் காற்று மாசு கண்டறியும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த சாத்திய கூறுகளை ஆராய்ந்து 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அக்பர் அகமது என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு விவரம்: சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டீசல் எரிபொருளால் இயங்கும் வாகனங்களும் அதிகரித்துள்ளன. இவற்றிலிருந்து வெளிவரும் கரும் புகையை வாகன ஓட்டிகளும், பொது மக்களும் சுவாசிக்கும் சூழல் ஏற்படுகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடும், மக்களின் உடலுக்கு தீங்கும் ஏற்படுகிறது.

பெரும்பாலும் நுரையீரல் சார்ந்த நோய்களுக்கு ஆளாகின்றனர். வாகன பெருக்கம், சுற்றுப்புற சீர்கேடு ஆகியவை காரணமாக, அதிகளவில் காற்றும், ஒலி மாசடைந்து வருகிறது. மாநகரில் காற்று, ஒலி மாசை கண்டறியும் மையங்கள் குறைந்தளவிலேயே இருக்கின்றன. 

இந்த மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு அனுப்பினேன்.

மேலும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரிய விவரங்களில், காற்று, ஒலி மாசடைவதை கண்டறிய 8 மையங்கள் மட்டுமே உள்ளன. அதிலும், தொழிற்சாலை நிறைந்த இடங்களில் 3 மையங்களும், வாகன போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் 3 மையங்களும், குடியிருப்பு பகுதிகளில் 2 மையங்கள் மட்டுமே இருப்பதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய தகவல் குறிப்பிட்டுள்ளது.

இது, அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக, அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, கிண்டி, பல்லாவரம் உள்ளிட்ட மாநகரில் பல பகுதிகளில் காற்று, ஒலி மாசை கண்டறியும் மையங்களை அதிகரிக்குமாறு விடுக்கப்பட்ட மனுவுக்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, போதிய அளவில் சோதனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு: காற்று, ஒலி மாசு கண்டறியும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இதற்கு சாதகமான சாத்திய கூறுகள் உள்ளதா என்பதை மூன்று மாதத்தில் ஆராய்ந்து உரிய முடிவெடுக்க வேண்டும். இது குறித்து மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com